ஆசிரியர்களுக்கு புதுமைப்பள்ளி விருதுகள், கனவு ஆசிரியர் விருது

(கோவை அதிரடியான நிருபர் ராஜ்குமார்)

கோவையில் சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகள், ஆசிரியர்களுக்கு
புதுமைப்பள்ளி விருதுகள், கனவு ஆசிரியர் விருது
கோவை, ஜுலை.12-
கோவையில் சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகள், ஆசிரியர்களுக்கு புதுமைப்பள்ளி விருது, கனவு ஆசிரியர் விருது, பரிசுத்தொகைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்கே.ஏ.செங்கோட்டையன், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரி கூட்டரங்கில் நடந்த விழாவில் வழங்கினர்.
விழாவில் திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 21 அரசுபள்ளிகளுக்கு புதுமை பள்ளி விருதுகளும், ரூ.30லட்சத்திற்கான காசேலாலையினையும் , 6 மாவட்டங்களைச் சேர்ந்த 29ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருதுகளுடன் தலா ரூ.10,000வீதம் ரூ.2.90 இலட்சத்திற்கான காசோலையினையும் வழங்கினார்கள்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் பேசும்போது :
ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு பல்வேறு திட்டங்களை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொலைநோக்கு பார்வையுடன் பள்ளிக்கல்வித்துறைக்கு வேறெந்த மாநிலங்களும் ஒதுக்கீடு செய்யாத அளவிற்கு ரூ.26,942 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது இந்தியாவிலேயே தமிழகத்திற்குத்தான். கடந்தாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின்போது ரூ.27,205.82 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாட்டில் அறிவு சார்ந்த சமூகத்தினை உருவாக்கிட பெரும் பங்களிப்பினை அளித்து வருகின்றார்கள்.
மேலும் தமிழ்நாட்டில் அரசு பணியாற்றும் 9 லட்சம் பணியாளர்களில் 3.72லட்சம்பேர் பள்ளிக்கல்வித்துறையை சார்ந்தவர்கள். இது மொத்த பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். அத்தகைய மிகப்பெரிய நிர்வாகத்தில் தற்போது சிறப்பு முயற்சியாக நிர்வாக சீர்திருத்தங்களும் பல்வேறு மாற்றங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு நகர்புற மாணவர்கள் இணையான கல்விச் சூழல் தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றை சமதளத்தில் வழங்கி கிராமப்புற மாணவர்களை முன்னேற்ற பாதையில் பள்ளிக்கல்வித்துறை அழைத்து செல்கின்றது. தமிழக அரசு எடுத்து வரும் சிறப்பு முயற்சிகளில் வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் இணைந்து சூழ்நிலைகளை அறிந்து சிறப்பான பங்களிப்பினை தரவேண்டும்.
தற்போது தமிழகத்தில் 62 மாவட்ட கல்வி அலுவலர்கள் இருந்த நிலையில் 120 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணியிடங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நகரத்தின் மத்தியிலிருந்து அனைத்து பள்ளிகளையும் கண்காணிப்பது இயலாது என்பதை வட்டார நிலைய ஆய்வு அலுவலர்கள் உணரவேண்டும். மேலும் வட்டார நிலை ஆய்வு அலுவலர்கள் அவர்கள் சார்ந்த பள்ளிகள் எவ்வாறு செயல்படுகிறது எனவும் கட்டிட வசதிகள் சுற்றுச்சுவர் வசதிகள் அடிப்படை சுகாதார வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பள்ளிக்கல்வித்துறை ஒருவார காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
அரசு பள்ளிகளில் செயல்படாத பெற்றோர் ஆசிரியர் நல சங்கங்களை மாற்றியமைத்து சேவை மானபான்மையுடன் இருப்பவர்களை கண்டறிந்து பெற்றோர் ஆசிரியர் சங்கங்களை தோற்றுவிக்க வேண்டும். ஆண்டிற்கு ஒருமுறையேனும் ஆண்டு விழா நடத்திட வேண்டும்.
அரசு பள்ளிகளில உள்ள கழிவறைகளை சுத்தம்செய்வதற்கு ஜெர்மன் நாட்டிலிருந்து 20பள்ளிகளுக்கு ஒரு வாகனம் வீதம் கழிவறை சுத்தம் செய்யும் வாகனம் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்கன்வாடிகளில் பயின்று வரும் சுமார் 1.80லட்சம் மாணவர்களுக்கு அவர்கள் சார்ந்த துவக்கபள்ளிகளிலேயே தமிழ் மற்றும் ஆங்கில பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை உயரும் சூழ்நிலை உருவாகி வருகின்றது இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும்போது :&
தமிழகம் முழுவதும் கடந்த 7 ஆண்டுகளில் கல்வி மற்றும் கல்வி சார்ந்த வசதிகளும் பெருமளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. கல்வி வசதியின் பரவலாக அனைவருக்கும் சென்றடையும் வகையில்ஐஐ தரமான கல்வியினை அளிப்பது என்ற அணுகுமுறை அடிப்படையாக உள்ளது. தமிழகத்தில் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கிட நாட்டிலேயே கல்வியில் சிறந்த முதல் மாநிலமாக தமிழகம் திகழ அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப்யாதவ், மாவட்ட ஆட்சித்தலைவர்த.ந.ஹரிஹரன் , மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், ஓ.கே.சின்ராஜ், சர்வசிக்ஷா அபியன் மாநில திட்ட இயக்குநர்இரா.சுடலைக்கண்ணன், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வி.சி.இராமேஷ்வரமுருகன், மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குநர்ச.கண்ணப்பன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்அய்யண்ணன் உட்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Skip to toolbar