நேஷனல் மாடல் பள்ளியில் மாணவர்கள் பதவி ஏற்பு விழா

( கோவை அதிரடியான நிருபர் ராஜ்குமார்)

கோவை, நேஷனல் மாடல் பள்ளியில்
மாணவர்கள் பதவி ஏற்பு விழா
கோவை, ஜுலை.12-
கோவை பீளமேட்டில் புகழ்பெற்ற நேஷனல் மாடல் பள்ளி மிகவும் சிறப்புடன் இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 2018&19ம் ஆண்டுக்கான 4 பிரிவுகளுக்கான தேர்தலும், மாணவர் தலைவர் பதவிக்கான தேர்தல் ஜூலை 9 ம் தேதி நடைபெற்றது. அதாவது மாணவர்களை மாணவர்களே தேர்ந்தெடுக்கும் தேர்தலாக மிக சிறப்பாக நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பதவி ஏற்பு விழா ஜுலை 12&ம் தேதி காலை 9 மணியளவில் நடைபெற்றது. இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர்களே பாராட்டுவிழா நடத்தியது இப்பள்ளியின் சிறப்பம்சமாகும்.
பள்ளி மாணவர் தலைவராக பதினொன்றாம் வகுப்பு மாணவி சோனாஸ்ரீ, துணைத் தலைவராக பதினொன்றாம் வகுப்பு மாணவர் ஸ்ரீ விக்னேஷ் ஆகியோர் பதவி ஏற்றனர். பள்ளியில் செயல்படும் நான்கு குழுக்களான ஃளையர்ஸ், ஸ்பிரிண்டர்ஸ், மரைனர்ஸ், ஸ்கீயர்ஸ் பிரிவுக்கான மாணவர் தலைவர்களும், பள்ளி விளையாட்டுத் துறைக்கான மாணவர் தலைவர்களும் பதவியேற்றனர்.பெற்றோர்கள் தங்கள் மகிழ்ச்சியினை பகிர்ந்துகொண்டனர். தேசிய கீதத்தோடு விழா இனிதே நிறைவு பெற்றது.

Skip to toolbar