ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்

(கோவை அதிரடியான நிருபர் ராஜ்குமார்)

ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்
கோவை, ஜுலை.8-
கோவையில் தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் ஆதித்தமிழர் பேரவையின் மாநகர செயலாளர் (தெற்கு) க.இனியவன் தலைமையில் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் “கையால் மலம் அள்ள தடை மற்றும் மறுவாழ்விற்கான சட்டம் 2015 ஐ தமிழக அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும், இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக கேரளா அரசு அறிமுகம் செய்துள்ள கழிவு அகற்றும் எந்திரம் பாண்டிக்கூட் ரோபாவை தமிழகத்தில் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஆதித்தழிழர் பேரவையின் மாநகர செயலாளர் (தெற்கு) க. இனியவன் பேசும்போது, தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் அதிமுக ஆட்சி மக்களின் வரிப்பணத்தை வீணாக செலவு செய்கிறது. இந்தியாவில் அதிக அளவில் மலக்குழி மரணங்கள் நிகழ்வதை வேடிக்கைதான் பார்கிறது.
கேரளா அரசு அறிமுகம் செய்து உள்ள கழிவு அகற்றும் எந்திரமான பாண்டிக்கூட் ரோபாவை வாங்குவதற்கு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும். நாட்டின் துய்மை பணியை செய்துவரும் எங்களுக்கு எவ்விதமான பாதுகாப்பையும் இந்த அரசு மேற்கொள்ள சட்டம் இயற்றவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக த.பெ.தி.கழகத்தின் பொது செயலாளர் கு. இராமகிருட்டிணன் கலந்து கொண்டார். ஆதித்தமிழர் பேரவையின் மாநகர செயலாளர் (வடக்கு) ஜோதி முத்துகுமார், புறநகர் மாவட்ட செயலாளர் (தெற்கு) தாமரை வீரன், இனை பொ.செ கோவை ரவிக்குமார், மா.து.த. சிவஞானம், விடுதலைச்செல்வன், துனைப்பொதுச் செயலாளர் தேன்மொழி, மற்றும் நேருதாஸ் உட்பட ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Skip to toolbar