ஜே.கே. டயர்ஸின் எஃப்.எம்.எஸ்.சி.கே. நேஷனல் ரேசிங் சாம்பியன்ஷிப் போட்டி

(கோவை அதிரடியான நிருபர் ராஜ்குமார்)

ஜே.கே. டயர்ஸின் எஃப்.எம்.எஸ்.சி.கே. நேஷனல் ரேசிங் சாம்பியன்ஷிப் போட்டி

கோவை, ஜூலை10,

18 முறை ஜே.கே டயர்ஸ் யூரோ எஃப்.எம்.எஸ்.சி.கே. நேஷனல் ரேசிங் சாம்பியன்ஷிப் போட்டியில், இரண்டு முறை வென்ற இலங்கையின் ப்ரெயன் பெரேரா இன்று நடைபெற்ற போட்டியில் டிராக்கின் ஈர பதத்தையும் மீறி இன்றைய நட்சத்திரமாக போட்டியில் வெற்றிபெற்றார்.

சனிக்கிழமை நடைபெற்ற லாரல்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற கார்த்திக் தரணி, நான்காவது மற்றும் இறுதி சுற்றில் பெரேராவிடம் கடுமையாக போட்டியிட்டும், இந்த திரில் போட்டியில் பெரேரா முதலிடத்தை பிடித்தார். இவர்கள் இருவரை தொடர்ந்து, மும்பையை சேர்ந்த நயன் சாட்டர்ஜி இந்த தொடரில் மூன்று முறை பட்டம் வென்றார்.

இரண்டு முறை இரண்டாவது இடத்தையும், ஒருமுறை மூன்றாவது இடத்தையும் பெற்றார். சென்னையை சேர்ந்த மற்றொரு கார் பந்தய வீரர் அஷ்வின் தத்தா சிறந்த முறையில் காரை செலுத்தி ரேஸ் 4ம் இரண்டாவது இடத்தையும், ரேஸ் 2 மற்றும் 3ல் மூன்றாவது இடத்தையும் பெற்றார்.

சக போட்டியாளர்கள் பெரேரா மற்றும் தரணி 23 மற்றும் 20 புள்ளிகளை பெற்றிருந்த நிலையில், அஷ்வின் தத்தா 24 புள்ளிகளை பெற்றார். நயன் 20 புள்ளிகளை பெற்றார்.

எல்.ஜி.பி. 4ம் பந்தையத்தில் கூட ஏமாற்றம் அளிக்கும் விதமாக டெல்லியை சேர்ந்த ரோஹித் கன்னா மற்றும் சென்னையின் ராகுல் ரங்கசாமி ஆகிய இருவரும் ஓரே புள்ளிகளை பெற்று வெற்றி பெற்றனர். இந்த பந்தயத்தில் முதல் ரேஸில் சென்னையை சேர்ந்த விஷ்ணு பிரசாத் வெற்றி பெற்றார். இதன்படி வெவ்வேறு பிரிவில் மூவரும் வெற்றி பெற்றனர்.

சக போட்டியாளர்கள் பெரேரா மற்றும் தரணி 23 மற்றும் 20 புள்ளிகளை பெற்றிருந்த நிலையில், அஷ்வின் தத்தா 24 புள்ளிகளை பெற்றார். நயன் 20 புள்ளிகளை பெற்றார்.

எல்.ஜி.பி. 4ம் பந்தையத்தில் கூட ஏமாற்றம் அளிக்கும் விதமாக டெல்லியை சேர்ந்த ரோஹித் கன்னா மற்றும் சென்னையின் ராகுல் ரங்கசாமி ஆகிய இருவரும் ஓரே புள்ளிகளை பெற்று வெற்றி பெற்றனர். இந்த பந்தயத்தில் முதல் ரேஸில் சென்னையை சேர்ந்த விஷ்ணு பிரசாத் வெற்றி பெற்றார். இதன்படி வெவ்வேறு பிரிவில் மூவரும் வெற்றி பெற்றனர்.

விஷ்ணு மற்றும் கோல்ஹபூர் சிட்டீஸ் மன்டோடி ஆகியோர் இரண்டு ரேஸ்களிலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை சிறந்த புள்ளிகளுடன் பிடித்தனர். இதில் ராகுல் 21 புள்ளிகள், ரோஹித் 21 புள்ளிகள் பெற்ற நிலையில் விஷ்ணு முதல் சுற்றில் 22 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார்.

சுசூகி கிர்ஸர் கப் போட்டியில் ஜோஸப் மெத்யூ தன்னுடைய திறமையின் மூலமாக இந்த வாரத்திலும் சகலவல்லமையுடன் யாராலும் வெற்றி பெற முடியாத நிலையில் உள்ளார். அவர் 10வது சுற்றை 14:16.799 முடித்த நிலையில், 6வது சுற்றை 1:23.411 நிமிடத்தில் விரைவாக முடித்து தன்னுடைய இரண்டாவது வெற்றியை பதிவு செய்தார்.

பெங்களூரை சேர்ந்த சையத் முசாமில் அலி மற்றும் ஹய்சாவெல் பகுதியை சேர்ந்த மல்ஹாம்தாவுங்லினா 2வது மற்றும் 3வது இடத்தை பிடித்தனர். இதேபோல இரண்டாவது இடத்தையும் அவர்கள் இதே பாணியில் இதே முறையில் முடித்தனர்.

வார விடுமுறையினால் ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்ட நிலைியல் காரி மோட்டர் ரேஸில் விமர்சையாக நடந்து முடித்தது. இசை, சாகசம் என்று இந்த ரேஸ் பந்தயம் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதில் போட்டியாளர்களும் கௌரவப்படுத்தப்பட்டனர்.

ரேஸ் பாதை வழுக்கலாக இருந்தாலும், போட்டியாளர்கள் தங்களின் திறமையால் வெற்றியை தனதாக்கி கொண்டனர். ப்ரேயான் பெரேரா மூன்றாவது சுற்றை 1:00.279 நிமிடத்தில் அதிவேகமாக முடித்து ஜே.கே. 18 கார் பந்தையத்தில் சாதனை படைத்தார்.

முடிவுகள்…

யூரோ ஜே.கே. சுற்று 2:

1. ப்ரேயான் பெரேரா (இலங்கை 15:22.568)

2. நயன் சேட்டர்ஜி (மும்பை15:26.377)

3. அஸ்வின் தத்தா (சென்னை 15:29.942)

யூரோ ஜே.கே. சுற்று 3:

1. ப்ரேயான் பெரேரா (இலங்கை 14:15.491)

2. நயன் சேட்டர்ஜி (மும்பை 14:17.269)

3. அஸ்வின் தத்தா (சென்னை 14:23.294)

யூரோ ஜே.கே. சுற்று 4:

1. கார்த்திக் தரணி (சென்னை 15:33.789)

2. சிட்டீஷ் மன்டோடி (கோல்ஹாபூர் 16:56.249)

3. அஸ்வின் தத்தா (சென்னை 17.02..297)

எல்.ஜி.பி.4. சுற்று 2

1. ரோஹித் கன்னா (டார்க் டான் 16:56.965)

2.சிட்டீஸ் மன்டோடி (கோல்ஹாபூர் 16:59.249)

3. விஷ்ணு பிரசாத் (எம்.எஸ்.போர்ட் 17:02.297)

Skip to toolbar