RPP குழுமம் ரெனாகான் புதிய நவீன ஷோரூம் துவக்கம் – ARJUNA TV

RPP குழுமம் ரெனாகான் புதிய நவீன ஷோரூம் துவக்கம்

(கோவை அதிரடியான நிருபர் ராஜ்குமார்)

ரெனாகான் புதிய நவீன ஷோரூம் துவக்கம்
கோவை,ஜுலை.9-
RPP குழுமம் 1970&ம் வருடம் கட்டுமான துறையுடன் இணைந்து 4 கட்டுமானத் துறை சார்ந்த நிறுவனங்களை தொடங்கியது. இந்தியாவில் கட்டுமானத் துறையில் தனக்கென்று தனிமுத்திரை பதித்து மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்று விளங்கும் நிறுவனங்களில் ஒன்று RPP குழுமம் ஆகும்.
இந்நிறுவனம் புதுமையான நவீன ரெனாகான் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் என்னும் ஷோரூமை கோவை அவினாசி ரோடு, நவஇந்தியா அருகில் உள்ள ஸ்ரீராம் அவென்யூவில் துவக்கியுள்ளது. இது கோவையில் ஏஏசி பிளாக் தொழில் துறையில் ஷோரூம் திறக்கும் முதல் நிறுவனம் ஆகும்.
சுவர்களுக்கு நல்ல தீர்வுகளை வழங்குவதற்கு புதுமையான ரெனாகான் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் விளங்குகிறது. இது நான்கு பிராண்டுகளுடன் இயங்கப்படவுள்ளது. இது குறித்து முதன்மை செயல் அலுவலர் ஜி.சுரேஷ்குமார் கூறும்போது செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது :
ரெனாகான் நிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் தேவையை புரிந்து கொள்வதற்கு அனுபவமிக்க ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கும், கட்டிட வடிவமைப்பாளர்கள், ஒப்பந்ததாரர்கள், பொறியாளர்கள், தொழில் துறையினர்க்கும், கட்டிடத்தின் தேவையற்ற சுமையை குறைத்து, வேலையாட்களின் செயல்திறனை அதிகப்படுத்தி கிடைக்கக்கூடிய இடத்தில் சிக்கனமான முறையில் கட்டுமான வேலையை செயல்படுத்த முடியும். இம்மையத்தில் தயாரிப்புகளை பார்வையிடுவதோடு மட்டுமல்லாமல், வெவ்வேறு இடங்களை வடிவமைப்பதற்கான ஆலோசனைகளைப் பெற முடியும் என்றும் கூறினார்.
ரெனாகான் ஏஏசி பிளாக்குகள் பற்றி செல்வசுந்தரம் (CMD – RPP Group OF COMPANY) கூறும்போது: – இரும்பு, சிமெண்ட் மற்றும் வேலையாட்கள் செலவுகளை 30 சதவிகிதம் குறைக்கிறது. மிகக் குறைந்த எடையாக இருப்பதால் கட்டிடத்தின் தேவையற்ற எடையை 65 சதவிகிதம் வரை குறைக்க உதவுகிறது. குளிர்வித்தலுக்கான செலவை 20 சதவிதம் வரை குறைக்க உதவுகிறது. இந்த ரெனாகான் ஏஏசி பிளக்குகள் அளவு பெரியதாகவும் எடைகுறைவாகவும் இருப்பதால் பணியாளர்கள் இதை எளிதில் கையாள முடியும். இதனால் கட்டிடங்கள் விரைவாகவும், மிக குறுகிய காலத்திலும் கட்டி முடிக்க முடியும். தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் ரெனாகான் ஏஏசி பிளாண்டு உள்ளது. எங்களது அடுத்த கட்ட நடவடிக்கையாக திருநெல்வேலி சிப்காட்டில் இரண்டாவது ஆலையை ரூ.50 கோடி முதலீட்டில் தொடங்குவதற்கான வேலையை தொடங்க உள்ளோம் என்று கூறினார்.
எங்கள் பிராண்டுகளைப் பற்றி தொடர்பு கொள்ள 73730 30077, 99652 57777 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்

tttttttt