கோவை வித்யா கணபதி திருக்கோயில் கும்பாபிஷேகம்

(கோவை அதிரடியான நிருபர் ராஜ்குமார்)

கோவை வித்யா கணபதி திருக்கோயில் கும்பாபிஷேகம்
கோவை, ஜுலை.2-
கோவை மாவட்டம், கணபதி, எஸ்.இ.எஸ்.மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அருள்மிகு வித்யா கணபதி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மகாகும்பாபிஷேகவிழா கடந்த 1.7.18 ஞாயிறு அன்று நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளியின் சேர்மன் குழந்தை வேலு தலைமையேற்றார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமேஷ்குமார், பள்ளியின் செயலாளர் K.R.பாண்டியன், பொருளாளர் டாக்டர் செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முழு முதற்கடவுளான வினாயகரின் அம்சங்களில் 36-வது அம்சம் வித்யா கணபதி அம்சமாகும். நம் தமிழ் மண் வேதங்களின் இருப்பிடமாகவும், ஆயகலைகள் அறுபத்து நான்கின் நாயகியான சரஸ்வதி தேவிக்கு முழுமையான அருட்பால் செய்து அனைத்துவித சத்தி சித்தி ஆனந்தம் பெற்று வரும் அருள்மிகு வித்யா கணபதி திருக்கோவில் ஆகும்.
இந்தப் பள்ளியில் மொத்தம் 1718 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். 59 ஆசிரியர்களை கொண்ட இந்த பள்ளியில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக அஷ்ட பந்தன விழா பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என சுமார் ஐந்தாயிரம் பேர் கலந்து கொண்டு கணபதி பெருமானின் அருளை பெற்றனர். பின்னர் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
பள்ளியின் சேர்மன் குழந்தைவேலு பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்த கோவிலை எங்களது பள்ளியில் நிறுவுவதற்கு 12 அங்கத்தினரை அழைத்து திருப்பணி செய்ய வேண்டும் என்று ஆலோசனை செய்து முடிவெடுத்தோம். ஸ்ரீ வித்யாகணபதி என்ற பெயர் நாமத்துடன், ஹயக்ரீவர், சரவஸ்வதி, துர்க்கையம்மன் ஆகியோர் ஆசி உள்ளடங்கிய வகையிலும், கும்பகோணத்தில் உள்ள மிகப் பிரம்மாண்டமான சிவாச்சாரியார்களை அழைத்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. பின்னர் ஆறு கால வேள்வி பூஜை நடைபெற்றது. இதில் இரண்டு கால பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது. மேலும் இந்தப் பணி தமிழகம் முழுவதும் நடைபெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்

AD

Skip to toolbar