முத்தூட் ஃபைனான்ஸ் தனிநபர் கடனுதவி பிரிவில் நுழைவதன் மூலம் தனது கடனுதவி திட்டங்களை விரிவுப்படுத்துகிறது!!

சென்னை, 4 ஜூலை 2018 – முத்தூட் ஃபைனான்ஸ் லிமிடெட் [Muthoot Finance Ltd (MFL)], தங்கம் மீதான கடனுதவிகளை வழங்குவதில் நம்பர் 1 ஆக திகழும் இந்நிறுவனம், தனிநபர் கடனுதவிப் பிரிவில் தனது செயல்பாடுகளை தொடங்குவதன் மூலம் தனது கடனுதவி திட்டங்களை விரிவுப்படுத்துகிறது.
எளிமைப்படுத்தப்பட்ட ஆவண முறை, துரிதமான மதிப்பீட்டு செயல்முறை மூலம் வாடிக்கையாளர்களுக்கு விரைவான, பொறுப்புணர்வுடானா சேவையை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது முத்தூட் ஃபைனான்ஸ். நிலையான வேலையில் இருக்கும் தனிநபர் மெட்ரோ நகரங்களில் வசித்தால், 20,000 ரூபாய் அல்லது அதற்கு மேல் சம்பளமும், நகரங்களில் வசிக்கும் தனிநபர் 10,000 ரூபாய் அல்லது அதற்கும் மேல் சம்பளம் பெறுபவராக இருந்தால், அவர்கள் முத்தூட் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் தனிநபர் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த தனிநபர் கடனுதவிக்கான வட்டிவிகிதம் 14% முதல் ஆரம்பமாகிறது.
முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ஜார்ஜ். எம். அலெக்ஸாண்டர் [Mr. George M Alexander, Executive Director, Muthoot Finance Ltd] கூறுகையில், ‘’கடந்த 15 ஆண்டுகளாக இந்தியாவில் தனிநபர் கடன்களின் தொகை பட்டுவாடா செய்வது அதிகரித்துள்ளது. மேலும், கடனுதவி வழங்கும் நிறுவனங்களின் வருவாயானது, சம்பளம் பெறும் வாடிக்கையாளர்கள் எளிதில் தனிநபர் கடனுதவியை பெறும் வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. அதேபோல் நிதிநிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் கடந்தகால கடனுதவி செயல்பாடுகள் திருப்தியளிக்கும் வகையில் இருந்தால் அதை அடிப்படையாக வைத்து மேலும் கடனுதவி அளிக்க ஆர்வம் காட்டி வருகின்றன” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “எங்களது கிளைகள் மற்றும் நேரடி விற்பனைக் குழு மூலமாக எங்களுக்கு தற்போதுள்ள வாடிக்கையாளர் தளத்தை மேலும் ஊக்குவித்து பயன்பெற உற்சாகப்படுத்துவோம். இதன்மூலம் மேலும் அதிக வாடிக்கையாளர்களை முத்தூட் ஃபைனான்ஸ் சென்றடையும். கடனுதவிகளை வழங்கிவரும் நிறுவனங்களில் பெரும்பாலானவை, வளர்ச்சிக்கண்ட கார்பொரேட் நிறுவனங்கள், பெரும் நிறுவனங்கள், மாநில மற்றும் மத்திய அரசு பணியாளர்களுக்கு தனிநபர் கடனுதவிகளை வழங்குவதில் அதிக கவனம் செய்து வருகின்றன. ஆனால் முத்தூட் ஃபைனான்ஸ், பெரும் கார்பொரேட் நிறுவனங்களில் பணிப்புரிபவர்களுக்கு தனிநபர் கடனுதவியை வழங்குவதைப் போலவே, அவர்களுக்கு இணையாக சிறிய மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களில் மாதாந்திர சம்பளம் பெறுபவர்களுக்கும் தனிநபர் கடனுதவிகளை வழங்குவதில் அதிக கவனம் செலுத்த இருக்கிறது. மேலும், முதல் முறையாக தனிநபர் கடனுதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் எங்களது விதிமுறைகளுக்கு உட்பட்டிருந்தால் அவர்களுக்கும் கடனுதவி மூலம் உதவ தயாராக இருக்கிறோம்’’ என்றார்.
தற்போதைய 2019-ம் நிதியாண்டில், தென்னிந்தியாவின் 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் தனிநபர் கடனுதவி தயாரிப்புகளை வழங்குவதை இலக்காக கொண்டு செயல்பட்டுவருகிறது முத்தூட் ஃபைனான்ஸ்., 2023-ம் ஆண்டு வரையிலான அடுத்த ஐந்து ஆண்டுகளில் 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனமாக கட்டமைப்பதில் இந்நிறுவனம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தனிநபர் கடனுதவி அவசியப்படும் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு அருகில் இருக்கும் முத்தூட் ஃபைனான்ஸ் லிமிடெட்டின் கிளைக்கு நேரடியாகச் சென்று, விண்ணப்பித்து பயன்பெறலாம்.

AD

Skip to toolbar