கலைஞர் கருணாநிதியின்95 வது பிறந்த நாள் விழாவில் ஸ்ரீதர் தலைமையில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

(சென்னை நிருபர் நெல்சன்)

சென்னை தெற்கு மாவட்டம் சைதை மேற்கு பகுதி 140வதுவட்டம் சார்பாக வழக்கறிஞரும் , பொதுக்குழு உறுப்பினருமான ஸ்ரீதர் தலைமையில் கலைஞர் கருணாநிதியின்95 வது பிறந்த நாள் விழா கூட்டம் நடைப்பெற்றது

இந்நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர் நாத்திகம் நாகராஜ், முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு ஆகியோர் சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொண்டனர்.
கலைஞர் கருணாநிதியின் 95வது பிறந்த நாளை முன்னிட்டு 3095 பேருக்கு நலதிட்ட உதவிகள் வழக்கறிஞர் ஸ்ரீதர் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது.

மேலும் மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், சைதை பகுதி செயலளார்கள் எம்.கிருஷ்ணமூர்த்தி, இரா.துரைராஜ், தாயகம் கவி, மு.மகேஷ்குமார், வேளச்சேரிமணிமாறன், மற்றும் மாவட்ட , பகுதி, வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வட்டத்துணைச செய் பிரஸ் மணி நன்றியுரை வழங்கினார்.

AD

Skip to toolbar