டீ கடையில் லாரி புகுந்து மோதி விபத்து ஒருவர் பலி

நாமக்கல் பேக்கரி கடைக்குள் லாரி புகுந்தது ஒருவர் உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம் வள்ளிபுரம் அடுத்த கீரம்பூரை டோல்பூத் அருகே சிவசக்தி பேக்கரி கடைக்குள் கீரம்பூரை சேர்ந்த கன்னண் என்பவர் டீ அருந்தி அமர்ந்து கொண்டு இருந்தார் அப்போது கர்நாடக பதிவு எண் கொண்ட லாரி சேலத்தில் இருந்து கரூரை நோக்கி சென்ற போது டிரைவரின் கட்டுபாடை இழந்து பேக்கரி கடைக்குள் புகுந்ததில் கன்னண் என்பவர் லாரியில் இடுபாடுகளில் சிக்கி சம்பவயிடத்திலியே உயிரிழந்தார். லாரி ஓட்டுனரை போலீசார் பிடித்தது விசாரித்து கொண்டிருந்த போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் குடிபோதையில் லாரி ஓட்டியதாக கூறி ஓட்டுனரை தர்மடி கொடுத்தனர். போலீசார் மீட்டு நல்லிபாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டநிலை.

AD

Skip to toolbar