கலிஃபோர்னியா: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில்

கலிஃபோர்னியா: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து விலகுவதாக அமெரிக்கா திடீரென அறிவித்துள்ளது. ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே, வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ ஆகியோர் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அப்போது பேசிய நிக்கி ஹாலே, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் கேலிக்குரியதாக செயல்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.