ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட் உலக சாதனை முயற்சியாக குழந்தைகளின் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

(கோவை அதிரடியான நிருபர் ராஜ்குமார்)

கோவையில் சர்வதேச யோகா தினம்

கோவை ஜுன். 18
கோவையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட் உலக சாதனை முயற்சியாக குழந்தைகளின் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை தனியார் பள்ளியை சேர்ந்த முதலாம் வகுப்பு பயிலும் குழந்தை யஸ்அஸ்வினி, யூகேஜி பயிலும் குழந்தை சம்யுக்தா இருவரும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட் உலக சாதனை நிகழ்த்தும் முயற்சியாக சம்யுக்தா பந்தின் மீது நின்று ஒரு நிமிடத்தில் 3 ஆசனங்களை செய்து காண்பித்தார். அதேபோல யஸ்அஸ்வினி இரண்டு நிமிடம் 40 வினாடிகளில் 27 வகையான ஆசனங்களை செய்து காண்பித்தார். இவை இரண்டும் ஜெட்லிபுக் ஆப் ரெக்கார்ட் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இதற்காக சம்யுக்தா விற்கும் அஸ்வினிக்கும் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு சாதனை புரிந்தமைக்கான சான்றிதழ்களுடன் பரிசு கோப்பைகளும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனத்தின் நிறுவனரும், பிரபல கராத்தே வீரருமான ஜெட்லி,மாணவிகளின் யோகா பயிற்றுனர் சாரதாம்பாள் என்கிற ரேவதி, மற்றும் மாணவிகளின் பெற்றோர்களும் உறவினர்களும் கலந்து கொண்டனர்.