யோக தினம் 08 முதல் 80 வயது வரை.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா சாதனை நிகழ்ச்சி

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு விவேகானந்தா யோகா மையம் மத்திய அரசின் ஆயுஷ் துறை ஆதரவுடன் யோகா பயிற்சி முகாமினை நடத்தி வருகிறது. யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 08 முதல் 80 வயது வரை உள்ளோர்கள் 108 ஆசனங்கள் செய்யும் நிகழ்வு ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வினை ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் பதிவு செய்து அச்சான்றிதழினை யோக சேவக் சந்தானகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர்க்கு ஜெட்லி வழங்கினார். மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார், நேரு யுவகேந்திரா மகேஷ், சிறுநீரக நிபுணர் ஜெயபிரகாஷ் நாராயணன், மருத்துவர் சீனிவாசன், இயற்கை மருத்துவர்கள் சுகுமார், அகில் சர்மிளா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாணவிகள் கீர்த்தனா, உதயநிலா, பத்மஜா , பாரதி, சுபஸ்ரீ , ரிதன்யா உள்ளிட்ட பள்ளி மாணவிகள் சிறப்பான பயிற்சிக்காக பதக்கம் பெற்றனர். ஸ்ரீ சாய் வித்யாலயா நர்சரி பள்ளி ராஜசேகரன், அமிர்தாயோக மந்திரம் யோகாசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Skip to toolbar