கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழா முன்னிட்டு கோவையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

(அதிரடியான கோவை நிருபர் ராஜ்குமார்)

கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

கோவை, ஜுன்.17-
கோவை, இராமநாதபுரம் பாரதி நகர் 3 வது வீதியில் கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் திமுக கோவை மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான கார்த்திக் கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.
விழாவிற்கு 74 வது வட்ட கழக செயலாளர் மேகநாதன் தலைமை தாங்கினார். சிங்காநல்லூர் பகுதி செயலாளர் எஸ்.எம்.சாமி வரவேற்புரை ஆற்றினார். மு.மா.ச.முருகன், காந்திநகர் நாகராஜ், முத்துக்குமார், பாரதி நகர் செல்வம் பொன்னுசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். நல்லதம்பி, அல்லாபிச்சை, வசந்தாமணி, கல்யாணசுந்தரம், சுப்ரமணியன், பொன்னுசாமி, அய்யாசாமி, மனோகரன் உட்பட கிளைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பவானி கண்ணன், சண்முகசுந்தரம், விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் இளஞ்சேரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர. மாநகர அணிகளின் நிர்வாகிகள் மற்றும் முன்னாள் செயலாளர்கள் வெ.நா. உதயகுமார், தளபதி இளங்கோ, பார்த்தசாரதி, அருள்மணி, அருள்மொழி, நாகேந்திரன், சிங்கை சிவா கபிலன் பழனிச்சாமி முருகேசன், திராவிடமணி சிங்கை சௌந்தரராஜன், பொறுப்புக்குழு குழு உறுப்பினர் உமா மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர் .
கிளை துணைச் செயலாளர் மணி நன்றி உரையாற்றினார்.

Skip to toolbar