15ஆண்டுகளுக்கு பின்னர் புது வெள்ளம் கண்ட வெள்ளலூர் குளத்தில் இரண்டாம் கட்டமாக 1001மரக்கன்றுகள் நடப்பட்டன.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் 71வது வார களப்பணி

கோவை,ஜுன்.17- 15ஆண்டுகளுக்கு பின்னர்
புது வெள்ளம் கண்ட வெள்ளலூர் குளத்தில் இரண்டாம் கட்டமாக 1001மரக்கன்றுகள் நடப்பட்டன.
கோவை மாவட்டம் வெள்ளலூர் கிராமத்திலுள்ள வெள்ளலூர் குளத்தை முன்மாதிரியாக உருவாக்கும் திட்டத்தில் முதற்கட்டமாக மியாவாக்கி முறையில் 1000மரக்கன்றுகள் வைக்கப்பட்டன.
1அடி அரை அடி உயரமுள்ள
1000மரக்கன்றுகள் வைக்கப்பட்டு 7 அடி உயரம் வளர்ந்து பசுமையாக காட்சியளித்தது.
350 அடி நீளத்திலும்,15 அடி அகலத்திலும்,3 அடி ஆழத்திலும் எடுக்கப்பட்ட
குழியில் உக்கடம் வாலாங்குளத்திலிருந்து எடுக்கப்பட்ட ஆகாயத்தாமரைகளையும்,காய்கறி சந்தையிலிருந்து எடுக்கப்பட்ட காய்கறி கழிவுகளையும்,மாட்டுச் சாணத்தையும் இயற்கை உரமாக இட்டு இரண்டாம் கட்டமாக மியாவாக்கி முறையில் 1001 மரக்கன்றுகள்
வைக்கப்பட்டன.
களப்பணியில்
60 குழந்தைகள் உட்பட 200தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் சமூக ஆர்வலர் அன்பரசன் கலந்துகொண்டார்.
15 ஆண்டுகளாக தண்ணீரின்றி காணப்பட்ட குளத்தில் தண்ணீரை கண்ட தன்னார்வலர்கள் இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாக நவதானியங்களையும்,மலர்களையும் தூவி வணங்கினர்.

Skip to toolbar