லோடு ஏற்றி வந்த லாரியில் மேல் அமர்ந்து 27 பேர் கூலி

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் பெரும்பள்ளம் பகுதியில் நேற்றிரவு ஆந்திராவில் இருந்து மாங்காய் லோடு ஏற்றி வந்த லாரியில் மேல் அமர்ந்து 27 பேர் கூலி தொழிலாளர்கள் பயணித்துள்ளனர். எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்த லாரி 70 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தமிழகத்தை சேர்ந்த 8 கூலி தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் வேலூரில் சிகிச்சை பெற்று வந்த நாரயணன் என்பவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் அனைவரும் நாட்றம்பள்ளி அடுத்த கள்ளரசம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்களாவர்.
லாரி 44 ஆண்டு பழையானது . Fc செய்யப்பட்டிருந்தாலும் இன்சூரன்ஸ் காலாவதியாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
காயமடைந்து வாணியம்பாடியில் சிகிச்சை பெற்று வந்தவர்களை தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், வணிகவரித்துறை அமைச்சர் வீரமணி, மாவட்ட ஆட்சியர் ராமன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன், சித்தூர் மாவட்ட ஆட்சியர், ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர்களுக்கான நிவாரணத்தொகை இன்று முதல்வரிடம் கலந்தாலோசித்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் வீரமணி கூறியுள்ளார்.