கோயம்புத்தூரில் பருவமழை முன்னெச்சரிக்கை?

(அதிரடியான கோவை நிருபர் ராஜ்குமார்)

கோயம்புத்தூர் மாநகராட்சியில்

பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார்

கோவை,ஜூன்.15&
கோயம்புத்தூர் மாநகராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை ஆறுகள், வாய்க்கால்கள், குளங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன் ஆகியோர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்கள்.
கோயம்புத்தூர் மாநகராட்சியில் வெள்ளலூர் குளத்திற்கு செல்லும் ராஜவாய்க்கால் மற்றும் குறிச்சிக் குளம் மற்றும் வாய்க்கால்களில் பருவ மழையையொட்டி தண்ணீர் தங்குதடையின்றி செல்வத ற்காக மாநகராட்சி நிர்வாகம் பொதுப் பணித்துறையுடன் இணைந்து முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சியில் 85வது வார்டு எம்.ஜி.ஆர் நகர் சேத்துமாவாய்க்காலில் மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்காக தூர்வாரப்பட் டுள்ளதையும், கிரீன்பார்க் பகுதியில் உள்ள வாய்க்காலில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும், 76-வது வார்டு, எல்.ஐ.சி காலனியில் உள்ள சேத்துமாவாய்க்கால் பகுதியினை அமைச்சர் பார்வையிட்டார். வாய்க்காலில் மழைநீர் செல்வதற்காகவும் அதிக மழையின் போது குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வழிந்தோடாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக தேவையான பணிகளை மேற்கொள்ளவும், கழிவு நீர் செல்ல வாய்க்கால் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட அலுவலர் களுக்கு எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டார்.
பின்னர் குறிச்சி என்.பி.இட்டேரி பகுதியில் உள்ள வாய்க்கால், போத்தனூரில் 95வது வார்டு பேச்சியம்மன் கோயில் தெருவில் வெள்ளலூர் குளத்திற்கு செல்லும் வாய்க்கால் ஆகிய பகுதிகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள ப்பட்டு தண்ணீர் தடையின்றி செல்வதையும், கோயம்புத்தூர் மாநகராட்சியிலுள்ள குறிச்சிக் குளத்தில் தண்ணீர் வருவதற்கான பணிகள் நடைபெற்று வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாள ர்களிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும் போது; முதலமைச்சர் ஆணையின்படி ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுப்ப ணித்துறையுடன் இணைந்து பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. வெள்ளலூர் குளத்திற்கு செல்லும் ராஜவாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தண்ணீர் தடையின்றி செல்வதையும், மழைநீர் தடுப்பு முன்னெ ச்சரிக்கையாக தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்ப ட்டுள்ளது என தெரிவித்தார்கள். ஆய்வின்போது மாநகராட்சி துணை ஆணையாளர் ப.காந்திமதி, மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிச்சந்திரன், மாநகரப் பொறியாளர் லட்சுமணன், செயற் பொறியாளர் த.ஞானவேல், பொதுப் பணித் துறை நீர்வள ஆதாரம் திருச் செந்தில்வேல், மாநகராட்சி செயற் பொறியாளர் (திட்டங்கள்) எஸ்.ரவிச்சந்திரன், தெற்கு மண்டல உதவி ஆணையாளர் தி.ரா.ரவி, மண்டல உதவி செயற் பொறியாளர் சுந்தர்ராஜன் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

AD

Skip to toolbar