விரைவில் டிடிவி தினகரனின் கூடாரம் காலியாகும்

சேலம்
விரைவில் டிடிவி தினகரனின் கூடாரம் காலியாகும்…..
திவாகரனை விட்டு வெளியேறியது டிடிவி. தினகரனுக்குதான் பேரிழப்பு – திவாகரன் ஆதரவாளர் மோகன் சேலத்தில் பேட்டி….
டிடிவி தினகரன் மற்றும் திவாகரன் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தினகரனை விட்டு திவாகரன் வெளியேறினார். தொடர்ந்து திவாகரன் தனது ஆதரவாளர்களை இணைத்துக்கொண்டு அண்ணா திராவிடர் கழகம் என்ற புதிய கட்சியை அண்மையில் தொடங்கினார்.
இந்நிலையில் சேலத்தில் அண்ணா திராவிடர் கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் கே .வி .கே . மோகன் தலைமையில் சேலம் மாவட்ட நிர்வாகிகள் பேரறிஞர் அண்ணா, சட்டமேதை அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து திவாகரன் ஆதரவாளர் கே.வி.கே.மோகன் செய்தியாளர்களிடம் கூறும்போது, டிடிவி தினகரனை அரசியலில் வளர்த்துவிட்டது திவாகரன்தான் . தற்போது திவாகரனை விட்டு தினகரன் வெளியேறியது அவருக்கு தான் பேரிழப்பு. மேலும் தினகரன் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அண்ணா திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் திவாகரனுடன் தொடர்பில் உள்ளனர். விரைவில் டிடிவி தினகரனின் கூடாரம் காலியாகும் என தெரிவித்தார்.
பேட்டி – கே.வி.கே.மோகன் — மாநில அமைப்பு செயலாளர் — திவாகரன் ஆதரவாளர்.

You may have missed