ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

ஜோலார்பேட்டை,ஜீன்.15− ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
பெங்களூரை சேர்ந்தவர் சஞ்சித்குமார்(27).இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.இந்நிலையில் தொழில் சம்பந்தமாக ஆந்திர மாநிலம் நெல்லுார் செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு பெங்களூரில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக ஆந்திரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி பயணம் செய்தார். அப்போது ரயில் நள்ளிரவு ஆம்பூர் ரயில்வே ஸ்டேசன் அருகே சென்று கொண்டிருந்தபோது சஞ்சித்குமார் ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்ததாக தெரிகிறது.அப்போது துாக்க கலக்கத்தில் இருந்த சஞ்சித்குமார் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.இதனால் அவர் ரயில் சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் பலியானார் பின்னர் தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் அங்கு சென்று இறந்த சஞ்சித்குமாரின் உடலை மீட்டு வேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Skip to toolbar