அலுவலர்களுக்கான ‘‘சி–வகை’’ 700 குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

சென்னை சைதாப்பேட்டையில் ரூ.100 கோடியில் அரசு அலுவலர்களுக்கு கட்டப்பட்டுள்ள 700 குடிwp-1456711618602யிருப்புகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.

இதுகுறித்து, தமிழக அரசு சார்பில்வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

700 குடியிருப்புகள்

சென்னை, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில் 100 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6.42 ஏக்கர் நிலத்தில், 6,57,020 சதுர அடி கட்டிட பரப்பளவில் கட்டப்பட்டுள்ள அரசு அலுவலர்களுக்கான ‘‘சி–வகை’’ 700 குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

முதல்–அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட இக்குடியிருப்புகளானது, ஒவ்வொரு கட்டிடத் தொகுதிக்கும் 100 குடியிருப்புகள் வீதம் 7 கட்டிட தொகுதிகளில் 700 குடியிருப்புகளை உள்ளடக்கியதாகும். ஒவ்வொரு குடியிருப்பும் 692 சதுர அடி கட்டிடப் பரப்பளவில், 2 படுக்கையறைகள், ஒரு வரவேற்பறை, குளியலறை மற்றும் கழிப்பறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு கட்டிட தொகுதிக்கும் 2 மின்தூக்கிகள், தீ தடுப்பு உபகரணங்கள், குடிநீர், தரைத் தளங்களில் வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகிய வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.