உலக இரத்ததான விழிப்புணர்வு ஊர்வலம் கோவையில் நடைபெற்றது.

கோவை அதிரடியான நிருபர் ராஜ்குமார்

உலக இரத்ததான விழிப்புணர்வு ஊர்வலம்
கோவை,ஜுன்.15-
உலக இரத்ததான விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கோவை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிகரன் விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
இது குறித்து அவர் பேசுகையில், அனைவருக்கும் இரத்ததான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இரத்ததான குறித்து தெளிவான புரிதல் ஏற்படுத்த வேண்டும். அனைவரும் இரத்ததான செய்திட முன்வரவேண்டும். ஏழை எளிய மக்களுக்கு இரத்தத்தை இலவசமாக தானம் செய்யவேண்டும். அறுவை சிகிச்சை, விபத்து காலங்களில் இரத்தம் தேவைப்படுவோருக்கு எவ்வித தடையுமின்றி இரத்தம் கிடைக்க வேண்டும். இது குறித்த விழிப்புணர்வை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஏற்படுத்தவேண்டும்.
கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ.அரசு மருத்துவமனை ஆகிய 4 மருத்துவமனைகளில் இரத்த வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. 19 தனியார் இரத்த வங்கிகள் , 6 இரத்த சேமிப்பு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு இரத்த வங்கிகள் மூலமாக சேமிக்கப்படும் இரத்தம் அவசர சிகிச்சைக்கும், தேவைப்படுவோர்க்கும் வழங்கப்பட்டு வருகிறது.
2017&2018 ஆம் வருடம் மேற்கண்ட 4 அரசு இரத்த வங்கிகள் மூலம் 196 முகாம் நடத்தப்பட்டு 18,535 யூனிட் இரத்தம் சேகரிக்கப்பட்டு பயனடைந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இரத்த வங்கிகளில் உள்ள இரத்தம் சேகரிப்பு குறித்த விபரங்களை www.tngovbloodbank.in வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
கோவை மாவட்ட குருதி பரிமாற்றக்குழுமம் அலுவலர் மரு.மங்கையர்க்கரசி வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பானுமதி, மாவட்ட ஊரகம் மற்றும் மருத்துவபணிகள் இணைஇயக்குனர் மலர்விழி, குடும்பநலத்துறை துணை இயக்குனர் மருத்துவர் கிருஷ்ணா, தொழுநோய் துணை இயக்குனர் பழனிசாமி, காசநோய் துணை இயக்குனர் மருத்துவர் சக்திவேல், உணவு பாதுகாப்பு மருத்துவர் விஜயாம்பிகை உட்பட பல்வேறு கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையத்தின் மாவட்ட திட்ட மேலாளர் (பொறுப்பு) சுந்தரேசன், மாவெட்ட மேற்பார்வையாளர் ஆர்.வி.எம்.குமணன் ஏற்பாடு செய்திருந்தனர். முடிவில் விழிப்புணர்வு ஊர்வலம் கோவை மருத்துவகல்லூரியுடன் நிறைவடைந்தது.