200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் 6 பேர் பலி

ஊட்டி யில் அரசு பேருந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
6 பேர் பலி

Ooty ayyasami 14-06-2018
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பேருந்து விபத்தில் 6 பேர் பலி 19 பேர் மேல்சிகிச்கை்காக கோவை அரசுமருத்துவமனையில் அனுமதி
நீலகிரிமாவட்டம் ஊட்டியிலிருந்து குன்னுாருக் குபுறப்பட்ட அ ரசு பேருந்து உதகை யிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மந்தாடா பகுதியில் ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 200 அடி பள்ளத்திலிருந்து விழுந்து விபத்துக்குள்ளானது, இதில பயணம் செய்த 45 பேரில் 6 பேர் பலியாகியுள்ளனர் , 19 பேர் உதகை அரசுமருத்துவமனையிலிருந்து மேல் சிகிச்கைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் மற்றவர்கள் உதகை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் ,இறந்தவர்கள் பெயர்கள் ஊட்டிநொண்டிமேடு பகுதியை சேர்ந்த ‌நந்தகுமார் வயது (33) குன்னுாார் பகுதியை சேர்ந்த தினேஷ் வயது (30) உதனை பேலிதளா பகுதியைசேர்ந்த தருமன் வயது (64) பிரபாகரன் கொல்லி மலைவகயது (50) ஊட்டிசான்ட்ராக்பகுதியை சேர்ந்தசா ந்தகுமாரி வயது( 55 ) பெங்களுரை சேர்ந்த ஜெயந்தி வயது (49) உயிரிழந்த நிலையில் இன்று உதகை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செ்ய்யும் தீவிரமாக நடந்து வருகிறது , மேலும் நடத்துநர் உட்பட பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது மேலும் ஊட்டி அரசு மருத்துவமனையின் முன்புஇறந்தவர்களின் உறவினர்கள் கதறி அழுவது கண்கலங்க செய்தது , மேலும் வி்பத்தின் முக்கியமாக பொதுமக்களின் ‌பங்களிப்பு பாராட்டும் விதமாக இருந்தது , மழை என்று பாராமலல் பொதுமக்கள் தோட்டத்தில் இறங்கி காயமுற்றவர்களை காப்பாற்றியது மனித நேயத்தில் ஒரு அங்கமாக இருந்தது , ஏற்கனே இதே பகுதியில் சுமார் 2 மாதங்களுக்குமுன்புலாரி ஒன்று ம் கார் ஒன்றும் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது லாரி ஒட்டுநர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தார் , மேலும் இந்த மாவட்ட நிர்வாகம் தடுப்புசுவர் அமைத்தும் வேகத்தடை அமைத்தால் இந்த பகுதியில் இதுபோன்ற பேராபத்தான விபத்துக்களும்மற்றும் உயிர்சேதங்களும் ஏற்படமால் இருக்கும் என்பதே இம்மாவடத்தில் உள்ள மக்களின் கோ ரிக்கையாக உள்ளது

Skip to toolbar