சத்தியமங்கலம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் பலி

சத்தியமங்கலம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். பொங்கம்பள்ளி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் கர்நாடக மாநிலம் பிடார் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்தனர்.