டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

(கோவை ராஜ்குமார் நிருபர்)

டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
கோவை, ஜுன்.12-
கோவை மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டம் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்றது. சிஐடியு மாவட்ட தலைவர் சந்திரன், எல்.பி.எப் மாநிலத் துணைத் தலைவர் ரத்தினவேல் தலைமை தாங்கினார்.
மதுபான சில்லரை விற்பனை கடைகள் 27 ஆயிரம் ஊழியர்கள் ஒப்பந்த முறையில் பணிபுரிகின்றனர்.தமிழக அரசின் மதுவிலக்கு கொள்கை மற்றும் நீதிமன்ற உத்தரவுகளின்படி டாஸ்மாக் கடைகள் மூடுவதும், திறப்பதுமான நடவடிக்கையில் டாஸ்மாக் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது இதனால் பெரும்பகுதி கடை ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை கணக்கில் கொண்டு தமிழக அரசு கடைகளின் எண்ணிக்கையை இறுதிப்படுத்தி கடைகளின விற்பனையை அடிப்படையில் தேவைப்படும் ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானித்து பணிமூப்பு அடிப்படையில் கடை பணி வழங்கி பணி வரன் முறைப்படுத்தி, அரசு ஊழியருக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு 2008 அரசாணையை அமல்படுத்த வேண்டும். அடையாள அட்டை, சீருடை, பி.எப். ரசீது வழங்க வேண்டும் உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ராக்கிமுத்து, மூர்த்தி, சுதிர், தமிழ் செல்வன், ஜான், ஜீவா, கண்ணன், ராமகிருஷ்ணன், தம்பி துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Skip to toolbar