பலி தீர்க்க வெடிகுண்டு தயாரித்த போது குண்டு வெடித்ததால் பரபரப்பு

பலிக்கு பலி தீர்க்க வெடிகுண்டு தயாரித்த போது குண்டு வெடித்ததால் பரபரப்பு, தீ காயம் பட்ட
இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதி .
மதுரை வாழை தோப்பு பகுதியை சேர்ந்த இருந்த முனியசாமி, நரசிம்மன் ஆகிய இருவரும்
முனியசாமியின் சகோதரர் வேல் குமாரை கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ஒரு கும்பல் வெட்டி
கொலை செய்துள்ளது, அந்த கும்பலை பலி தீர்க்க நாட்டு வெடி குண்டை முனியசாமி, நரசிம்மன்
ஆகிய இருவரும் வீட்டில் தயாரித்த போது வெடிகுண்டு வெடித்துள்ளது இதில் முனியசாமி,
நரசிம்மன் ஆகிய இருவரும் தீ காயம் அடைந்தனர். தீ காயம் அடைந்த இருவரும் மதுரை அரசு
மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீ காய பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
பெற்று வருகின்றனர், இருவருக்கும் 50% தீ காயம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது.

Skip to toolbar