மகான் ஸ்ரீ பசவர் ஜெயந்தி  குடும்ப விழா

தமிழ்நாடு மாநில வீரசைவ பேரவை குடும்ப விழா

கோவை, ஜுன்11&

மகான் ஸ்ரீ பசவர் ஜெயந்தி குடும்ப விழா நேற்று கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. பேரூர் மடம் மருதாசல அடிகளார் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். மேலும் தமிழ்நாடு வீரசைவ பேரவை விழாவின் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. வீர சைவ குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளுடன் விழா இனிதே துவங்கியது. விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது :

வீரசைவ சமுதாயத்தினர் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய நாடுகளில் பரவியுள்ளனர். இந்த விழாவானது தமிழகத்தில் உள்ள அனைத்து வீரசைவ மக்களை ஒன்றிணைக்கும் விழாவாக அமைந்துள்ளது என்றார். விழாவில் வீர சைவ சமுதாய மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக வலியுறுத்தியும், ஸ்ரீ பசவருக்கு சென்னை மெரீனா சாலையில் சிலை வைக்க கோருதல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில், 2018&ஆம் ஆண்டு அரசு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற வீரசைவ சமுதாயத்தை சேர்ந்த மாணவ மாணவிகளை பாராட்டி ரொக்கப்பரிசும், சான்றிதழ்களும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

பின்னர் மாநில தலைவர் நாகரத்தினம் பேசியதாவது : இந்த கூட்டத்தைப் பார்க்கும்போது மாநாடு போல் தோன்றுகிறது. வீரசைவம் என்றால் சைவ சமய கொள்கைகளை தீவிரமாக கடைபிடித்தல் என்று அர்த்தம். கி.பி.8&ம் நூற்றாண்டிற்குப் தமிழகத்தில் சமணத்தை தழுவிய களப்பிரர்களின் ஆட்சி ஒழிக்கப்பட்டு, சைவ சித்தாந்தாத்தை வளர்தெடுக்கப்பட்டதில் மிக முக்கிய பங்கை வகித்தவர்கள் நம் வீரசைவ சமூகத்தினர். பின்னர் சோழர்களின் ஆட்சிகாலங்களில் சைவ சமயத்தின் வளர்ச்சி மிக உச்சத்தை அடைந்தது. இந்த காலகட்டங்களில்தான் சைவம் தாந்ரீக முறைகளிலிருந்து ஆகம வழிபாடு முறைகளுக்கு பல கோவில்கள் மாற்றப்பட்து. அந்த காலகட்டங்களில்தான் பல சைவ மடங்கள் தமிழகத்தில் நிறுவப்பட்டு, அதன் கீழ் பல கோவில் நிர்வாகங்கள் நம் சமூகத்தினரின் நிர்வாக கட்டுபாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த சைவ சித்தாந்த தாக்கத்தினால் கர்நாடகாவில் ‘வீரசைவம்‘ பசவேஷ்வரால் உருவாக்கப்பட்டு, மிகப்பெரிய வெற்றியடைந்தது. கர்நாடகாவில் விஜயநகர அரசு மிகப்பெரிய பேரரசாக உருவெடுக்க வீரசைவ அமைப்புதான் காரணமாகவும் அமைந்தது. அது தமிழ்நாட்டிற்கும் பரவியது. நம்முடைய சைவ சமயம் சார்ந்த பெரியவர்கள் அந்த வீரசைவ பரவலுக்கு ஆதரவும் தந்தார்கள். அந்த காலகட்டங்களில் ஏற்படுத்தப்பட்டதுதான் நம்முடைய வீரசைவ மடங்கள் ஆகும். ஆனால் அந்த காலகட்டத்தில் வீரசைவம் பற்றிய விழிப்புணர்வு அடிதட்டு மக்களுக்கு சென்றடையவில்லை என்பதே உண்மை

விழாவில் ஸ்ரீ சிவமூர்த்தி முருகா சரணாஜி சித்ர துர்கா, கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண் குமார், மாநில தலைவர் நாகரத்தினம், கௌரவ தலைவர் முத்தையா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோவை வசந்த், சட்ட ஆலோசகர் வக்கீல் முத்து வீரப்பன், விழாக்குழு தலைவர் ஏ.வி.ஆர், விழாக்கமிட்டி தலைவர் மேட்டுப்பாளையம் பாலு, மாவட்ட துணைத் தலைவர் சொசைட்டி சோமு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதி, உட்பட நிர்வாகிகள், பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அதிரடியான நிருபர் கோவை ராஜ்குமார்

Skip to toolbar