லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனை

திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனை.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறையைச் சேர்ந்த 25 அதிகாரிகள் நேற்று மாலை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது 30க்கும் மேற்பட்ட அலுவலர்களிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது.

ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், இடைத்தரகர்கள் மற்றும் பணியில் இருந்தவர்களிடம் உரிய கணக்கு இல்லாமல் வைக்கப்பட்டிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று மாலை தொடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை இன்று அதிகாலை வரை நீடித்தது.

Skip to toolbar