8வது மாடியில் இருந்து குதித்து மாணவி

நீட் தேர்வு தோல்வியால் தொடரும் சோகம்: தெலுங்கானா, டில்லி மாணவர் தற்கொலை_

ஐதராபாத்: : ‘நீட்’ தேர்வில் தோல்வியடைந்ததால், தற்கொலை செய்து கொண்ட தமிழக மாணவியை தொடர்ந்து நீட் தேர்வில் தோல்வியடைந்த தெலுங்கானா மாநிலம் ,டில்லி யைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த, பெரவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம், 47; கூலித்தொழி லாளி. இவரது, இளைய மகள் பிரதிபா, டாக்டருக்கு படிக்க விரும்பினார். பிளஸ் 2 பொதுத்தேர்வில், 1,125 மதிப்பெண் பெற்றார். கடந்த ஆண்டு, நீட் தேர்வில், 159 மதிப்பெண் பெற்று, தோல்வியடைந்தார். .மனமுடைந்த அவர், நேற்று முன்தினம், விஷம் அருந்தி மயங்கிய நிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு இறந்தார்.
தெலுங்கானா மாணவி
இந்நிலையில் தெலுங்கானா, ஐதராபாத் கச்சிக்குடா பகுதியை சேர்ந்த ரன்வீர்சிங் என்பவரின் மகள் ஜஸ்லீன் கவுர் (வயது 18) ‘நீட்’ தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறவில்லை என்பதால் மன வேதனையடைந்தார். நேற்று காலை தாம் குடியிருந்து வரும் வீ்ட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ள 10 மாடிகளை கொண்ட மயூரி வணிக வளாகத்துக்கு சென்று உள்ளார். அங்கு விறுவிறுவென மாடிப்படிகள் ஏறி, அந்த கட்டிடத்தின் உச்சிக்கு சென்று அங்கிருந்து குதித்து, தற்கொலை செய்துக்கொண்டார். மாணவி, கீழே குதித்தது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
டில்லி மாணவர்
டில்லி துவாரக செக்டர் பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவர் பிரணவ் மகேந்திரநாத், கடந்த 2016-ம் ஆண்டு பிளஸ்டூ தேர்வு முடித்து விட்டு மருத்துவம் படிக்க விரும்பி கடந்த 2 வருடங்களாக நீட் தேர்வு எழுதி வந்தார். தேர்ச்சிபெறவில்லை.இந்நிலையில் இந்தாண்டு நீட் தேர்வு எழுதினார். தேர்வு முடிகள் வெளியாயின. தோல்வியடைந்ததால் வேதனை அடைந்து 8 மாடி கட்டடத்தில்இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

Skip to toolbar