கோவை பட்டணம் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கோவை பட்டணம் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கோவை,ஜூன்.5-
கோவை எல் அண்ட் டி பைபாஸ் பகுதியில் உள்ள பட்டணம் ஊராட்சியில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் 30.5.18 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் கூனம்பட்டி ஆதீனம் ஸ்ரீ ல ஸ்ரீ நடராஜ சுவாமிகள் தலைமையிலும், தென்சேரிமலை கார்த்திகேயன் குருக்கள் சென்னங்கிரி சிவம் ஆகியோர் யாக பூஜை செய்து கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். அதிகாலை 4 மணி அளவில் இரண்டாம் கால யாகபூஜையுடன் துவங்கிய கும்பாபிஷேக நிகழ்வு வேதிகார்சனை , நாடி சந்தானம், மகாதீபாராதனையுடன் புனித நீர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கலசங்களுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மனுக்கும் ஓதுவாமூர்த்திகள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர் இந்த நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்று பரவசம் அடைந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை துரைசாமி, பக்தவச்சலம், பார்த்த சாரதி உள்ளிட்ட கோவில் நிர்வாகிகளும் பொதுமக்களும் செய்திருந்தனர்.

Skip to toolbar