ஜேஎம் ஃபைனான்ஸியல் கிரெடிட் சொலுசன்ஸ் லிமிடெட் என்சிடி வெளியீடு மே 28, 2018 -ல் ஆரம்பம்!

ஜேஎம் ஃபைனான்ஸியல் கிரெடிட் சொலுசன்ஸ் லிமிடெட் என்சிடி வெளியீடு மே 28, 2018 -ல் ஆரம்பம்!

சென்னை, 23மே 2018 : ஜேஎம் ஃபைனான்ஸியல் குழுமத்தின் வங்கிச் சாரா நிதிச் சேவை நிறுவனம் (NBFC), ஃபைனான்ஸியல் கிரெடிட் சொலுசன்ஸ் லிமிடெட் (JM Financial Credit Solutions Limited). இந்த நிறுவனம், ரியல் எஸ்டேட் டெவலப்பர்களூக்கு ஒருங்கிணந்த நிதித் தீர்வுகளை அளித்து வருகிறது. இது பொது மக்களுக்கு பாதுகாப்பான, தரக் குரியீடு பெற்ற, பட்டியலிடப்படும் பங்குகளாக மாறாத கடன் பத்திரங்களை (Secured Non-Convertible Debentures – Secured NCDs) மே 28, 2018 -ல் வெலியிடுகிறது. என்சிடி ஒன்றின் முக மதிப்பு ரூ.1,000 ஆகும்

அடிப்படை வெளியீடு ரூ. 300 கோடி, கூடுதல் ஆதரவு மூலம் ரூ. 450 கோடி ஆக மொத்தம் ரூ. 750 கோடிக்கு என்சிடி வெளியிடப்படுகிறது.

இந்தப் பகுதி 1 வெளியீடு (“Tranche 1 Issue Limit”) குறித்த விவரங்கள், நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் மே 14, 2018 அன்று இந்த நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த என்சிடி வெளியீடு ஜூன் 20 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. வெளியீட்டை முன்னதாக நிறைவு செய்வது அல்லது நீடிப்பது குறித்து நிறுவனத்தின் என்சிடி வெளியீட்டு குழு (NCD Public Issue Committee.) முடிவு செய்யும்.

இக்ரா மற்றும் இந்தியா ரேடிங்க்ஸ் – அதிக பாதுகாப்பை குறிக்கிறது.

இந்தப் பாதுகாப்பான என்சிடி பகுதி 1 வெளியீடு (Tranche I Issue) ஆக ஆக அமைகிறது. இதற்கு தரக்குறியீடு [இக்ரா] ஏஏ/நிலையானது ரூ. 2,000 கோடிக்கு மதிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரம் அந்த நிறுவனம், ஏப்ரல் 27, 2018-ல் வெளியிட்டுள்ள தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. மேலும், இது மே 10, 2018-ல் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இண்ட் ஏஏ/நிலையானது – இந்தியா ரேட்டிங்ஸ் ரூ. 2,000 கோடிக்கு மதிப்பு அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்த விவரம் அந்த நிறுவனம், ஏப்ரல் 27, 2018-ல் வெளியிட்டுள்ள தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. மேலும், இது மே 10, 2018-ல் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இக்ரா மற்றும் இந்தியா ரேட்டிங்ஸ் அளித்துள்ள தரக்குறியீடுகள், நிதி ஆவணங்கள், நிதி சார்ந்த கடமைகளை சரியான நேரத்தில் பராமரிப்பதைப் பொறுத்தவரை மிக உயர்ந்த அளவு பாதுகாப்பைக் கொண்டிருக்கும்.

திரு. திரு. சஷ்வத் பெலாபுர்கர், முதன்மை செயல் அதிகாரி, ஜேஎம் ஃபைனான்ஸியல் கிரெடிட் சொலுசன்ஸ் லிமிடெட் (Mr. Shashwat Belapurkar, CEO, JM Financial Credit Solutions Limited) கூறும் போது, “எங்களின் ஜேஎம் ஃபைனான்ஸியல் கிரெடிட் சொலுசன்ஸ் லிமிடெட் -ன் பொதுமக்களுக்கான என்சிடி வெளியீடு, நிதிச் சேவை அளிக்கும் அங்கீகாரம் மற்றும் நம்பகமான பிராண்ட் ஆன ஜேஎம் ஃபைனான்ஸியல் குழுமத்தின் வரும் முதல் என்சிடி வெளியீடு என்பதில் பெருமிதம் கொள்கிறோம். எங்களின் நிறுவனத்தின் நிதி நிலை நிலையான மற்றும் தொடர்ச்சியான செயல்பாட்டை கொண்டு சாதனை படைத்து வருகிறது. தொடர்ந்து நிலையான வருமானம் மற்றும் லாபம் வளர்ச்சிக் கண்டு வருகிறது. மேலும், கடன் – பங்கு மூலதன விகிதம் நன்றாக இருப்பதோடு, வலிமையான சொத்து தரத்தையும் கொண்டிருக்கிறது. எங்களின் மொத்த வருமானம் 2015 நிதி ஆண்டு முதல் 2018 நிதி ஆண்டு வரை ஆண்டுக்கு சராசரி 109.9% அதிகரித்து வந்துள்ளது. வரிக்கு பிந்தைய லாபம், 2015 நிதி ஆண்டு முதல் 2018 நிதி ஆண்டு வரை ஆண்டுக்கு சராசரி 88.8% அதிகரித்து வந்துள்ளது. இந்த என்சிடி வெளியீட்டு, நிதித் திரட்டும் செலவை கணிசமாக குறைக்கும் என்பதோடு பல்பிரிவு நிதி திரட்டலாகவும் அமையும். இதன் மூலம் நிதித் திரட்டல் தன்மை மேம்படும். இதன் மூலம் வேகமாக வளர்ந்து வரும் நிதிச் சேவை சந்தையை பயன்படுத்திக் கொள்ள முடியும்.” என்றார்.

கிரைசில் ஆராய்ச்சி (CRISIL Research) அடுத்த சில ஆண்டுகளில் வங்கிச் சாரா சேவை நிதி நிறுவனங்களின் மொத்த நிதி உதவி அளிப்பது, ஆண்டுக்கு சராசரியாக 23% லிருந்து 26% ஆக வளர்ச்சிக் கண்டு, நிதி ஆண்டு 2019-க்குள் ரூ. 2 லட்சம் கோடி (2.0 trillion ) ஆக உயரும் மதிப்பிட்டுள்ளது.

அடுத்த ஐந்தாண்டுகளில் வங்கிச் சாரா சேவை நிதி நிறுவனங்களின் மொத்த நிதி உதவி அளிப்பது, ஆண்டுக்கு சராசரியாக நிதி நிதி ஆண்டு 2017லிருந்து நிதி ஆண்டு 2022-க்குள் 20% லிருந்து 25% ஆக வளர்ச்சிக் காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது என கிரைசில் மதிப்பிட்டுள்ளது. இது ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறைச் சட்டம் 2016 ( Real Estate (Regulation and Development) Act, 2016 – RERA) நடைமுறைக்கு வந்த பிறகான வளர்ச்சியாக இருக்கும்.

அனைத்து முதலீடுகளூக்கும் குறைந்தபட்ட முதலீடு ரூ. 10,000 ஆக உள்ளது. இதன் பிறகு 1 என்சிடி (மதிப்பு ரூ.1,000) மடங்குகளில் விண்ணப்பிக்கலாம். முதலில் வருபவர்களுக்கு, முன்னுரிமை என்கிற அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும். (அதிக ஆதரவு இருக்கும்பட்சத்தில், ஒரேதேதியில் பலர் விண்ணப்பிக்கும்பட்சத்தில் விகிதாச்சார அடிப்படையில் என்சிடிகள் ஒதுக்கீடு செய்யப்படும்)என்சிடிகளுக்கு முதலீட்டாளர்கள் டீமேட் வடிவில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.