14ம் ஆண்டு விழா திங்களுர் மாரியம்மன் திருக்கோவில் அன்னதானம். கோவை

14ம் ஆண்டு விழாவை முன்னிட்டு
திங்களுர் மாரியம்மன் திருக்கோவில் அன்னதானம்

கோவை மாவட்டம் உடையாம் பாளையம் அருள்மிகு திங்களுர் மாரியம்மன் திருக்கோவில் திருக்கல்யாண உற்சவ திருவிழா 19.05.2018 சனிக்கிழமை இனிதே நடைபெற்றது. சனிக்கிழமை இரவு திரைப்பட பின்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற மதுரை கே.எஸ்.பாட்ஷா சேட் வழங்கிய அபிநயா நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கோவை மாவட்ட தேமுதிக கழக செயலாளர் (கிழக்கு) காட்டன் செந்தில் துவக்கி வைத்தார். பாப்பநாயக்கன் பாளையம் பகுதி கழக பொறுப்பாளர் தீனதயாளன் ககலந்து கொண்டு சிறப்பித்தார். 66வது வட்ட கழக செயலாளர் நா. பாண்டியன் விழாவினை சிறப்பித்தார்.

22.05.2018 செவ்வாய்க்கிழமை மதியம் அம்மன் திருக்கல்யாணம் திருவிழா நடைபெற்று அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் நடைபெற்றது.
கோவை மாவட்ட தேமுதிக கழக செயலாளர் காட்டன் செந்தில்,
பாப்பநாயக்கன் பாளையம் பகுதி கழக பொறுப்பாளர் தீனதயாளன்,
66 வது வட்ட கழக செயலாளர் நா. பாண்டியன் அவர்களும் விழாவில் கலந்து கொண்டு அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கி விழாவினை சிறப்பித்தனர்.

Skip to toolbar