முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின்    நினைவு நாளை முன்னிட்டு       தமிழ் நாடு காங்கிரஸ்      வர்த்தக பிரிவு சார்பில் ஏழை மாணவ மாணவிகளுக்கு    நல திட்ட உதவிகள் வழங்கும் விழா. சட்டமன்ற உறுப்பினர்.  H. வசந்த குமார் தலைமையில் நடைபெற்றது

பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்ப பெற நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் H.வசந்தகுமார் வலியுறுத்தல்

21.05.2018.அன்று முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு தமிழ் நாடு காங்கிரஸ் வர்த்தக பிரிவு சார்பில் ஏழை மாணவ மாணவிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா. சட்டமன்ற உறுப்பினர். H. வசந்த குமார் தலைமையில் நடைபெற்றது

பின்னர் நிருபர்களை சந்தித்த அவர்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளும் பெட்ரோல் டீசல் விலை கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம் அப்போது குருடாயில் 140 டாலர் இருந்த போது கூட பெட்ரோல் டீசல் விலை எங்கள் கட்டுப்பாட்டில் இருந்தது ஆனால் இன்று குருடாயில் விலை குறைவாக இருந்தும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. கர்நாடகாவில் தேர்தல் முடியும் வரை விலை ஏற்றாத அரசு. அங்கு தோல்வியை சந்தித்த உடன் விலை உயர்த்தி உள்ளது இது அவர்களின் சுயநலத்தை காட்டுகிறது. மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.