மும்பை ஜேஜே மருத்துவமனையில் மருத்துவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: சயான் மருத்துவமனை மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

மும்பை ஜேஜே மருத்துவமனையில் மருத்துவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: சயான் மருத்துவமனை மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

மும்பையில் உள்ள ஜேஜே மருத்துவமனையில் மருத்துவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து சயான் மருத்துவமனை மருத்துவர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மும்பை ஜேஜே மருத்துவமனையில் நோயாளி ஒருவர் இறந்ததற்கு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் எனக் குற்றஞ்சாட்டிய அவரது உறவினர்கள் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் அங்கிருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கிச் சூறையாடினர். மருத்துவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஜேஜே மருத்துவமனை மருத்துவர்கள் நேற்று வேலைநிறுத்தம் செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக சயான் மருத்துவமனை மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புறநோயாளிகள் பிரிவில் மருத்துவப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Skip to toolbar