கேரள மாநிலத்தில் நிபா வைரல் காய்ச்சல் 10 பேர் பலி

நிபா வைரல் காய்ச்சல் எதிரொலி நெல்லை மாவட்ட மருத்துவமனைகளில் ஆய்வு

கேரள மாநிலத்தில் நிபா வைரல் காய்ச்சல் 10 பேர் பலியானதன் எதிரொலியாக நெல்லை மாவட்டத்தில் பல்வேறு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவமனைகளில் சுகாதாரத்துறையினர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். மருத்துவமனைகளில் காய்ச்சல், மூளைக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்படுபவர்களின் ரத்த மாதிரி சோதனை உட்படுத்தப்படும் என திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் செந்தில் குமார் செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

AD

Skip to toolbar