ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் ஒன்று திரண்டு போராடியது போல ஸ்டெர்லைட் ஆலைக்காக இளைஞர்கள் போராடும் காலம் விரைவில் வரும்

தூத்துக்குடி மாவட்டம்
29-04-18

ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் ஒன்று திரண்டு போராடியது போல ஸ்டெர்லைட் ஆலைக்காக இளைஞர்கள் போராடும் காலம் விரைவில் வரும் என தூத்துக்குடியில் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி பனிமய மாதா கோயில் வளாகத்தில் தொடர்ந்து 15 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்தித்து இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
இன்று நேற்று நடைபெறும் போராட்டம் அல்ல கடந்த 23 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும் வரும் நிலையில் இப்போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கண்டிக்காதது வருந்தமளிக்கிறது என்ற அவர், இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்றார். ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் ஒன்று திரண்டு போராடியது போல ஸ்டெர்லைட் ஆலைக்காக இளைஞர்கள் போராடும் காலம் விரைவில் வரும் என கூறிய அவர் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம் நடைபெறும் என்றார்.
பேட்டி : சமுத்திரக்கனி – இயக்குனர்

Skip to toolbar