உ.பி., ராஜஸ்தானில் 42 பேர் பலி

கனமழை : உ.பி., ராஜஸ்தானில் 42 பேர் பலி

ஜெய்பூர் : உ.பி.,யின் மேற்கு பகுதி மற்றும் ராஜஸ்தானின் கிழக்கு பகுதிகளில் நேற்று நள்ளிரவு சுமார் 4 மணி நேரம் சூறை காற்றுடன், விடாது கனமழை பெய்தது. இதில் 42 பேர் பலியாகி உள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. கனமழையால் வீடுகள் இடிந்து விழுந்ததில் இவர்கள் உயிரிழந்துள்ளனர். உ.பி.,யின் மதுராவில் 4 பேரும், 7 குழந்தைகளும், ராஜஸ்தானில் 5 குழந்தைகள் உள்ளிட்ட 14 பேரும் உயிரிழந்துள்ளனர். கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் 200 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Skip to toolbar