பயிர் பருவத்திற்கு கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, குவிண்டாலுக்கு ரூ.200 உயர்த்தப்பட்டுள்ளது

கச்சா சணலுக்கான ஆதாரவிலை
குவிண்டாலுக்கு ரூ.200 உயர்வு

2018�19ம் பயிர் பருவத்திற்கு கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, குவிண்டாலுக்கு ரூ.200 உயர்த்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து வரும் ஜூலை � ஜூன் பருவத்தில் கச்சா சணல் விலை குவிண்டாலுக்கு ரூ.3700 ஆக இருக்கும். மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு 2017�-18ம் பயிர் பருவத்தில் கச்சா சணலுக்கான குறைந்த பட்ச ஆதார விலை ரூ.3500 ஆக இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன் கிழமை நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கணக்கீட்டு சராசரி உற்பத்திச் செலவினத்தைக் காட்டிலும் 63.2 சதவீதம் அதிக வருவாயை குறைந்த பட்ச ஆதார விலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு மடங்கு உற்பத்திச் செலவினத்துடன், குடும்ப உழைப்பையும் கணக்கிட்டு கணக்கீட்டு சராசரியை நிர்ணயிக்கும் முறையில் பெறப்படும் உற்பத்திச் செலவினத்தைக் காட்டிலும் கூடுதலாக 63.2 சதவீத வருவாய் கிடைக்கும் என மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

வேளாண் விலைகள் மற்றும் கட்டணங்கள் கமிசனின் (சிஏசிபி) பரிந்துரைகளின் அடிப்படையில், கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்ள சணல் விவசாயிகள், குறிப்பாக மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் பீஹார் ஆகிய மாநிலங்களில் உள்ள சணல் விவசாயிகள் பயன்பெறுவர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த 3 மாநிலங்களில் மட்டும் சுமார் 95 சதவீதம் கச்சா சணல் விவசாயிகள் உள்ளனர். அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், பல்வேறு பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை உற்பத்திச் செலவினத்தைக் காட்டிலும் 1.5 மடங்கு அதிகமாக நிர்ணயிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.

சணல் விளையும் மாநிலங்களில், கொள்முதலுக்கு ஆதார விலை அளிக்கும் நடவடிக்கைகே மேற்கொள்ளும் முக்கிய முகமையாக சணல் கழகம் உள்ளது. தற்போது இருமடங்கு உற்பத்திச் செலவினம், இருமடங்கு உற்பத்திச் செலவினத்துடன், குடும்ப உழைப்பு குறியீடு மற்றும் இருமடங்கு நுகர்வு விலை என்ற மூன்று அடிப்படை கணக்கீடுகளை சிஏசிபி வசம் உள்ளது.

Skip to toolbar