சி2எச் மோசடி
சி2எச் மோசடி
டைரக்டர் சேரன் நடத்தி வரும் ‘சி2எச்’ என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக அவரது மகள் நிவேதா பிரியதர்ஷினி உள்ளார். இந்நிறுவனத்தில் பரமக்குடி மாதவன் நகர் பழமுத்துநாதன் என்பவர் ரூ.80 ஆயிரம் டெபாசிட் செலுத்தி பரமக்குடி, பார்த்திபனூர், முதுகுளத்தூர், கமுதி, அபிராமம் ஆகிய பகுதிகளின் முகவராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.
அந்நிறுவனம் சரியாக செயல்படாததால் கணக்குகளை சரிபார்த்து டெபாசிட் தொகையை திரும்பத்தருவதாக சேரனும் அவரது மகளும் ஒப்புக்கொண்டு, 27.6.2015 அன்று பழமுத்துநாதனுக்கு காசோலை வழங்கி உள்ளனர். அந்த காசோலையை 4.7.2015ல் வங்கியில் செலுத்தினாராம். ஆனால் வங்கி கணக்கில் போதிய பணம் இல்லாமல் அந்த காசோலை திரும்பிவிட்டதாம். இதுபற்றி டைரக்டர் சேரனிடம் கேட்டபோது, 4 நாட்கள் கழித்து மீண்டும் அந்த காசோலையை வங்கியில் செலுத்தும்படி கூறியுள்ளார். அதற்குள் தொகையை வங்கியில் செலுத்தி விடுவதாகவும் கூறினாராம்.