பொறியியல் மாணவர் சேர்க்கை – ஆன்லைன் பதிவு மே 3ம் தேதி தொடங்குகிறது

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் மே 3 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.சென்னை அண்ணா பல்கலைகழக இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி மே. 30  இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் 567 கல்லூரிகள் பங்கேற்றுள்ளன.பொறியியல் படிப்புக்கு வரும் 29ம் தேதி இணையதளம் மூலம் விண்ணப்பம் கோருவதற்கான அறிவிப்பு வெளியீடு. விண்ணப்பங்களை பதிவு செய்ய தமிழகம் முழுவதும் 42 மையங்கள் திறக்கப்படும்.கடந்த ஆண்டு 1,52,704 பொறியியல் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன
ஜூன் முதல் வாரத்தில் விண்ணப்பதாரர்களின் அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தொடங்கப்படும். உதவி மையங்களில் கணினிகள், அச்சுப்பொறிகள், பயிற்சிபெற்ற நபர்கள், குடிநீர் மற்றும் சிற்றுண்டி உள்ளிட்ட வசதிகள் இருக்கும் என கூறினார்.