கோட்டைக்கரை முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா

கோட்டைக்கரை முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்த, 63, திருத்தேரி கிராமம், ஜி.எஸ்.டி. சாலையில் பிள்ளையார் கோவில் குளக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கோட்டைக்கரை முனீஸ்வரர் ஆலய நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் மார்ச் 30ந் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது.
அன்று காலை 6 மணிக்கு மேல் யாக பூஜை, விசேச யாகபூர்த்தி, யாத்ராதானம், காலபூஜை போன்ற நிகழ்வுகளும் அதனைத் தொடர்ந் காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் மகாகும்பாபிஷேக விழாவும் அதனைத் தொடர்ந்து முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது.
பூஜை முடிந்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதலும், அன்னதானம் வழங்கும் நிகழ்வும் வெகு விமரிசையாக நடந்தேறின.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கோட்டைக்கரை முனீஸ்வரர் ஆலய நிர்வாகி திரு. டி. ஜெயச்சந்திரன், அமைச்சரம்மன் கோவில் நிர்வாகி, ந. குணசேகரன் ஆகியோர் பேசினர்.
பிள்ளையார் கோவில் குளக்கரையில் தென்புறமாக அம்மன் ஆலயமும் ,தென்புறமாக அருள்மிகு கோட்டைக்கரை முனீஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளன. இந்த இரண்டு தெய்வங்களும் ஊர்மக்களுக்கு மட்டுமல்லாமல் ஜி.எஸ்.டி. சாலையில் வருவோர் போவோருக்கெல்லாம் அருள் பாலிக்கின்றனர்.
இந்த முனீஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர். இந்த ஆலயத்திற்கு வந்து செல்வோருக்கு அவர்கள் நினைத்த காரியமெல்லாம் வெற்றியைத் தேடித்தரும் என்பது ஐதீகம்”””” என்றார்.
ஆறு தலைமுறையாக இந்த குளக்கரையில் அமைந்துள்ள இரு தெய்வங்களுக்கும் தமிழில் வழிபாடு நடைபெறும் என்பது கூடுதல் சிறப்பு.
இந்த கும்பாபிஷே விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் டி.ஜி. தமிழ்ச்செல்வன், டி. கனகாச்சரி குடும்பத்தினர் மற்றும் டி. ஜெயச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.
திருத்தேரி மற்றும் பாரேரி கிராம குலதேவதை ஆலய பராமரிப்பு குழுவின் ஏற்பாட்டின் கும்பாபிஷேக விழா இனிதே நிறைவுபெற்றது

.

Skip to toolbar