சிலிண்டரில் எதிர்பாராவிதமாக தீ பற்றியதால் கோயிலில் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர்

கும்பகோணம் : ஆதிகும்பேஸ்வரன் கோயிலில் மகா சிவராத்திரியை யொட்டி ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்து வந்த நிலையில் சுவாமி தரிசனம் செய்து திரும்பியவர்களுக்கு பிரகாரத்தில் பால் வழங்கப்பட்டது அங்கிருந்த எரிவாயு சிலிண்டரில் எதிர்பாராவிதமாக தீ பற்றியதால் கோயிலில் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர் பின்னர் சிறிது நேரத்தில் ஈர சாக்கு கொண்டு அணைக்கப்பட்டது இதனால் பெரிய அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது