Main Menu

106 வயது ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டருக்கு புதுச்சேரி டிஜிபி நேரில் பொங்கல் வாழ்த்து

நெல்லித்தோப்பு அருள்படையாச்சி வீதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (106). இவர் கடந்த 1937-ம் ஆண்டு புதுச்சேரி காவல்துறையில் போலீஸ்காரராக பணியில் சேர்ந்தார். அதன்பின் பதவி உயர்வு பெற்று முத்தியால்பேட்டை சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றி கடந்த 1965-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணி ஓய்வு பெற்றார். இவரது மனைவி இருதயமேரி.

இவர்களுக்கு 5 பிள்ளைகள். தற்போது நெல்லித்தோப்பு வீட்டில் வசித்து வரும் ஆரோக்கியசாமிக்கு 106 வயது ஆகிறது. இந்த நிலையில் புதுச்சேரி போலீஸார் 106 வயதான முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியசாமி மற்றும் அவரது குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். போலீஸ் டிஜிபி சுனில்குமார் கவுதம் பட்டுவேட்டி, சட்டை அணிந்து ஆரோக்கியசாமி வீட்டுக்கு சென்றார். அவரை ஆரோக்கியசாமி குடும்பத்தினர் வரவேற்றனர்.

போலீஸ் டிஐஜிக்கள் சந்திரன், ராஜிவ்ரஞ்சன், ஆயுதபடை கமாண்டன்ட் பர்ன்வால், போலீஸ் எஸ்பிக்கள் குணசேகரன், கொண்டாவெங்கடேஸ்வராவ், இன்ஸ்பெக்டர்கள் வீரவலல்வன், செந்தில்குமார், தனசெல்வம் உள்ளிட்ட போலீஸார் கலந்து கொண்டனர். டிஜிபி சுனில்குமார் தன் வீட்டில் தயார் செய்த பொங்கல், பழங்கள், கரும்பு உள்ளிட்டவற்றை ஆரோக்கியசாமிக்கு கொடுத்து, அவரிடம் வாழ்த்து பெற்றார். உடன் வந்த மற்ற போலீஸாரும் வாழ்த்து பெற்றனர்.



Comments are Closed