கார் விபத்தில் ஹாலிவுட் நடிகை ஜெசிகா பால்கோல்ட் பலி

ஆலிவுட் நடிகை ஜெசிகா பால்கோல்ட் (29) ஆஸ்திரேலியாவை சேர்ந்த . சம்பவத்தன்று இவர் சிட்னி நகரில் தனது பெற்றோர் மற்றும் தங்கையுடன் காரில் சென்று கொண்டிருந்தார். வழியில் எதிரே வந்த கார் இவர் சென்ற கார்மீது பயங்கரமாக மோதியது.

அதில் படுகாயம் அடைந்த நடிகை ஜெசிகா மற்றும் அவரது குடும்பத்தினர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெசிகாவின் தந்தை லாட்ஸ் (69), தாயார் விலியன் (60) மற்றும் தங்கை அன்னபெல்லி பால்கோல்ட் ஆகியோர் கடந்த வாரம் பரிதாபமாக இறந்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஜெசிகா பால்கோல்டும் நேற்று பரிதாபமாக மரணம் அடைந்தார். இதை ஆஸ்பத்திரி நிர்வாகம் உறுதி செய்துள்ளது.