Main Menu

பீகாரை சேர்ந்த முதியவர் 98 வயதில் முதுகலை பட்டம் பெற்று சாதனை

பாட்னா: பீகார் மாநிலத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது 98 வயதில் பொருளாதார பிரிவில் முதுகலை பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் இளங்கலை பொருளாதார பிரிவில் பட்டம் பெற்றார். பின்னர் குடும்ப சூழல் காரணமாக படிப்பை தொடர முடியாமல் போனது. இந்நிலையில் பாட்னாவில் உள்ள நாளந்தா திறந்த நிலை பல்கலையில் முதுகலை படிப்புக்கு விண்ணப்பித்தார்.

குடும்பத்தினர் உதவியுடன் பட்ட மேற்படிப்பை மேற்கொண்ட ராஜ்குமார் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். முதுமையிலும் படித்து பட்டம் பெற்ற ராஜ்குமாரின் முயற்சியை அனைவரும் பாராட்டினர்.



Comments are Closed