மாநில தலைவர் மாற்றம் இல்லை

 

CM_mwnவட கர்நாடகா மாவட்டங்களில் வறட்சி பாதித்த பகுதிகளுக்கு சென்றுள்ள முதல்வர் சித்தராமையா ஆய்வு மேற்கொண்டு வருகிறார். வறட்சியால் பாதித்த பகுதிகளில் குடிநீர், மின் பற்றாக்குறை போன்றவற்றை தீர்த்துவைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரை மாற்றி மல்லிகர்ஜூனகார்கேவை மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்க கட்சியின் மேலிடம் முடிவு செய்துள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. இதில் உண்மை எதுவும் இல்லை. எக்காரணத்தைக்கொண்டும் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரை மாற்றும் செய்யும் எண்ணம் இல்லை என்றார்.

AD

Skip to toolbar