Main Menu

 அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், இங்கிலாந்தின் ராயல் காலேஜ் ஆஃப் எமர்ஜென்சி மெடிசின் உடன் இணைந்து இந்திய மருத்துவர்களை பாராட்டி கெளரவித்திருக்கிறது!

 சென்னை: ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் நம்பகமான மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளின் குழுமமாக திகழும் ப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், இங்கிலாந்தைச் சேர்ந்த ‘ராயல் காலேஜ் ஆஃப் எமர்ஜென்சி மெடிசின்’ [Royal College of Emergency Medicine] -ல் எமர்ஜென்சி மெடிசின் [Emergency Medicine] பிரிவு பாட்த்திட்டத்தில் MRCEM டிப்ளோமா படிப்பை வெற்றிகரமாக படித்து தேர்ச்சிப்பெற்ற இந்திய மருத்துவர்களை இன்று பாராட்டி கெளரவித்தது.  உலகம் முழுவதிலும் இருந்து, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 150 பேர், ராயல் காலேஜ் ஆஃப் எமர்ஜென்சி மெடிசின் கல்லூரி வழங்கும் இந்த டிப்ளோமா படிப்பை மேற்கொண்டனர். ப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர்.பிரதாப்.சி.ரெட்டி, ப்பல்லோஹாஸ்பிடல்ஸ் குழுமத்தின் துணைத்தலைவர் திருமதி. ப்ரீத்தா ரெட்டி முன்னிலையில், நடைப்பெற்ற விழாவில் இந்தியாவிலிருந்து MRCEM 2017 -ல் தேர்ச்சி பெற்ற 20 இந்திய மருத்துவர்களைப் பாராட்டி கெளரவித்தார்.

      அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள், தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு நெருக்கடியான சூழ்நிலைகளில்  சிகிச்சையளிக்க வேண்டியிருப்பதால், அவர்களுக்கு முறையான கல்வி அவசியம்தேவைப்படுகிறது. காரணம், மேலும் மருத்துவர்களுக்கு   நவீன கார்டியாக் லைஃப் சப்போர்ட், விபத்து சிகிச்சை மற்றும் வாழ்க்கையை அச்சுறுத்தும் நிலையிலான இதர நோய்கள் ஆகியவற்றில் சிறப்பு நிபுணத்துவம் தேவை. அவசரச் சிகிச்சை மருத்துவர்கள், அந்தந்த சூழ்நிலைகளுக்கேற்றவாறுமுடிவுகளை விரைவா வேண்டும். தீவிர மன அழுத்தமுள்ள சூழ்நிலைகளில் இதர மருத்துவ   நிபுணர்களை வழிநடத்த வேண்டும்.  இதை கருத்தில் கொண்டு, அத்தகைய சிறப்பு ஆற்றலை இந்தியாவில் உருவாக்கும் நோக்கத்துடன், கடந்த பத்தாண்டுகளாக இங்கிலாந்தைச் சேர்ந்த ‘ராயல் காலேஜ் ஆஃப் எமர்ஜென்சி மெடிசின்’ உடன் இணைந்து இதற்கான நிபுணத்துவ திட்டத்தை மேற்கொண்டு வருகிறது அப்பல்லோஹாஸ்பிடல்ஸ்.

      இவ்விழாவில், பட்டம் வென்று தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கெளரவித்த அபோலோ ஹாஸ்பிடல்ஸ் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர்    டாக்டர் பிரதாப் சி ரெட்டி பேசுகையில்“நாங்கள், ’ராயல் காலேஜ் ஆஃப் எமர்ஜென்சி மெடிசின்’ உடன்   நீண்டகாலமாக தொடரும் நல்லுவைக்கொண்டுள்ளோம். எங்களுக்கிடையேயான ந்த அருமையான உறவு

 

 

  பத்தாண்டுகளைக் கடந்தும் தொடர்கிறது.மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சி என்பது அப்பல்லோவுக்கு மிகவும் விருப்பமான ஒன்று. தனியார் துறையில் பணியாற்றும்மருத்துவர்களுக்கான பயிற்சி என்பதுஇந்தியாவில் உள்ள தனியார் சுகாதார துறையில் இன்னும் முழுமையாக இல்லை. அதனால், தற்போது அவசர மருத்துவ துறையில் ஒரு குறிப்பிடத்தக்க ஒழுங்குமுறையாக தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கென தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துவரும் இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய தேர்வு அணையத்திற்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். ஆரோக்கிய சிகிச்சைகள் மற்றும் அவரசப்பிரிவு சிசிச்சைகளில்உலகத்தரத்திலான சிகிச்சைகளை அளிப்பதில் இந்தியாவை ஒரு ’சூப்பர் பவர்’ நாடாக உருவெடுக்க வைக்கும் முயற்சிகளில் அப்பல்லோ தொடர்ந்து உந்து சக்தியாக செயல்பட்டு வருகிறது’’

      இந்த பாடத்திட்டமானது அவசரச் சிகிச்சை மருத்துவர்களுக்கு முன்னுரிமைக்குரிய சிகிச்சை [prioritization]மதிப்பீடு [assessment]தலையீடு [intervention]மறுமதிப்பீடு [resuscitation]மற்றும் நோயாளிகளுக்கு இருக்கும சிகிச்சை முறைகளை நிர்வகித்து, வேறு சிகிச்சை பிரிவுகளுக்கு மாற்றுதல் வரையிலான அனைத்திலும் நிபுணத்துவத்தையும், தீவிர பயிற்சியையும் அளிக்கிறது. இதனால் அவசரச் சிகிச்சை மருத்துவர் நோயாளிகளை மையமாக கொண்ட, அவர்களை அக்கறையுடன் கவனித்து கொள்வதற்கான நிபுணத்துவ அறிவு, கையாளும் திறமைகள் மற்றும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மனப்போக்கு ஆகியவற்றை பெற்று சிகிச்சையளிக்க முடியும்..

      உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவையில் முன்னோடியாக திகழும் அப்பல்லோஹாஸ்பிடல்ஸ் குழுமம்நம்நாட்டுக்கும், உலக நாடுகளுக்கும் சேவை செய்யும் தகுதி வாய்ந்த மருத்துவர்களை, அதிநவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் குறித்த நிபுணத்துவம் பெற்றவர்களா உருவாக்குவதில்கடமைப்பட்டுள்ளது. இந்த கல்வித்திட்டம் மூலம் அப்பல்லோ அவசரகால சிகிச்சையின் நிர்வாகத்தில் தலைமைத்துவ பண்பை மருத்துவர்களுக்கு  வழங்குவதற்கான அவசியத்தை வலியுறுத்துகிறது.

      விபத்து சிகிச்சை பிரிவை ‘கேஷூவாலிட்டி’ என்ற பெயரிலிருந்து ‘எமர்ஜென்சி மெடிசின்’ என்று முதல் முறையாக மாற்றிய மருத்துவமனையாக திகழ்கிறது. ’கேஷூவாலிட்டி’ என்ற வார்த்தையை அடிக்கடி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதால் நோயாளிகளுக்கு குழப்பம் நேரிடக்கூடாதுஎன்பதற்காக பெயரை மாற்றியமைத்தது. அவசரச் சிகிச்சைக்கான ப்ரத்யேக ஆம்புலன்ஸ் ஹெல்ப்லைன் 1066- ஐ முதன் முதலாக அப்பல்லோ மருத்துவமனை அறிமுகப்படுத்தியது. இந்த அவசர சிகிச்சை ஆம்புலன்ஸில், இந்தியாவிலேயே அதிக அளவில் ‘அட்வான்ஸ்ட் கார்டியோ லைஃப் சப்போர்ட்’ (Advanced Cardio Life Support – ACLS) சேவைகள் கொண்டிருக்கும் ஆம்புலன்ஸ்களாக திகழ்கின்ற்ன.

  

ப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் பற்றி :

                   

        சென்னையில் 1983-ம் ஆண்டு அப்பல்லோமருத்துவமனை முதன்முதலாக டாக்டர் பிரதாப் ரெட்டியால் தோற்றுவிக்கப்பட்டதுஇதுவரை அப்பல்லோருத்துவமனைகளில் 1 லட்சத்து 60 ஆயிரம் இருதய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனபுற்று நோய் சிகிச்சை அளிப்பதில் அப்பல்லோ மருத்துவமனை உலகின் மிகப் பெரிய தனியார் மருத்துவமனையாக திகழ்கிறது. உடல்உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை அளிப்பதிலும் இந்த மருத்துவமனை உலகில் முன்னணி மருத்துவமனையாகத் திகழ்கிறது.

 

       ஆசியாவின் மிகப் பெரிய மற்றும் மிக நம்பகமான மருத்துவ குழுமமாக அப்பல்லோ குழுமம் திகழ்கிறது.தற்போது 64 மருத்துவமனைகளில் 9215 படுக்கைகள் உள்ளன2500 மருந்தகங்கள்90 சிகிச்சை மையங்கள் மற்றும் பரிசோதனைக் கூடங்களும் உள்ளன.110-க்கும் மேற்பட்ட தொலை மருத்துவ மையங்களும் 80க்கும் மேற்பட்டஅப்பல்லோ முனிச் இன்சூரன்ஸ் கிளைகளும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

 

       மருத்துவ காப்பீடு உட்பட ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளை அப்பல்லோ வழங்கி வருகிறது. 15-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்வி மையங்கள் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவையும் உள்ளனஇவற்றில் க்ளோபல் க்ளினிக்கல் ட்ரையல்ஸ், எபிடெமியாலாஜிகல் ஆய்வுகள், ஸ்டெம் செல் மற்றும் மரபணு ஆராய்ச்சிகள் உள்ளிட்டபல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளப்படுவதில் அபோலோ ஹாஸ்பிடல்ஸ் முன்னணியில் இருக்கிறது. இந்த ஆய்வுகளின் மூலம் பல்வேறு புதிய சேவைகளை வழங்கிவருகிறது. பெரும் பொருட்செலவில் முதல்முறையாக ப்ரோட்டான் தெரபி மையத்தை உருவாக்கியிருக்கிறது. ஆசியா, ஆஃப்ரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு தனது சேவையை இம்மையம் வழங்கிவருகிறது. ஒவ்வொரு நான்கு நாட்களிலும் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் குழுமம், சர்வதேச தரத்தில், ஹெல்த்கேர் சேவைகளின் மூலம் ஒரு மில்லியன் மக்களின் வாழ்வை மேம்படுத்துகிறது, உலகத்தரத்திலான மருத்துவச் சேவைகளை ஒவ்வொரு தனிநபருக்கும் வழங்கவேண்டுமென்ற நல்லெண்ணத்துடன் தேவையான அனைத்து அம்சங்களையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

 

        இந்திய அரசாங்கம் அப்பல்லோ மருத்துவமனைக்காக நினைவு தபால் தலையை வெளியிட்டுள்ளதுஇது அரிதாக வழங்கப்படும் கவுரவம் ஆகும்மருத்துவமனை ஒன்றுக்கு இந்த கவுரவம் கிடைத்தது இதுவே முதல் முறை. அப்பல்லோமருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டிக்கு மத்திய அரசு2010-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவித்துள்ளதுகடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக உலகத் தரம் வாய்ந்த சிகிச்சையை வழங்குவதில், நிபுணத்துவம் கொண்ட தலைமைப் பண்புடன் நோயாளிகளை அணுகுதல், புதுமையான மருத்துவ கண்டுப்பிடிப்புகளை அறிமுகப்படுத்துதல், அதிநவீன மருத்துவ தொழில்நுடப் கருவிகள் மூலம் சிகிச்சைகள் அளித்தல் என அனைத்து அம்சங்களிலும் அப்பல்லோ முன்னணி வகிக்கிறது. மேம்பட்ட மருத்துவ சேவைகள் மற்றும் ஆய்வுகளுக்காகஅபோலோ குழுமம் உலக மருத்துவமனைகள் பட்டியலில் தரவரிசையில் தொடர்ந்து முன்னணி இடம் வகிக்கிறது.Comments are Closed