நியூசிலாந்து இமாலய வெற்றி: லதாம் சதம், பவுலட் 4 விக்கெட் – ARJUNA TV

நியூசிலாந்து இமாலய வெற்றி: லதாம் சதம், பவுலட் 4 விக்கெட்

மும்பை:

இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் லதாம் (103*), டெய்லர் (95) கைகொடுக்க 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. பவுலட் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட் வீழ்த்தினார். முன்னதாக 200வது ஒருநாள் போட்டியில் விளையாடிய கேப்டன் விராத் கோஹ்லி சதம் அடித்து சாதித்தார்.

இந்தியா வநதுள்ள வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி 3 ஒருநாள், 3 ‘டுவென்டி-20’ தொடரில் விளையாட உள்ளது. முதலில் ஒருநாள் தொடர் நடக்கிறது. இதன் முதலாவது ஆட்டம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராத் கோஹ்லி முதலில் ‘பேட்டிங்கை’ தேர்வு செய்தார். இந்திய அணியில் ரகானே, மணிஷ் பாண்டே இருவருக்ஓகம் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே நேரம் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பெற்ரார்.

இந்திய அணிக்கு வேகத்தில் பவுல்ட் தொல்லை கொடுத்தார். இவரது வேகத்தில் தவான் (9) நடையை கட்டினார். மொந்த மைதானத்தில் சாதிப்பார் என எதிர்பார்த்த ரோகித் சர்மாவையும் (20) பவுலட் வெளியேற்ற ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின் கேப்டன் விராத் கோஹ்லியுடன் கேதர் ஜாதவ் இணைந்தார். இது கோஹ்லிக்கு 200வது போட்டி என்பதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்பட்டது. இதற்கு ஏற்றார் போல் தொடக்கத்தலிருந்தே நியூசி., பந்து வீச்சை அனாயசமாக எதிர் கொண்டு ரன்கள் எடுத்து வந்தார். ஆனால், சான்ட்னர் ‘சுழலில்’ சிக்கிய கேதர் ஜாதவ் (12) ஆட்டமிழக்க இந்திய அணி நெருக்கடியை சந்தித்தது. அடுத்து தினேஷ் கார்த்திக் களம் வந்தார்.

கார்த்திக் சற்றே அதிரடியாக விளையாட கோஹ்லி மகிழ்ச்சி அடைந்தார். வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோஹ்லி 62 பந்தில் அரைசதம் அடித்தார். 22வது ஓவரில் இந்தியா 100 ரன் கடந்தது. அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், சவுத்தீ வேகத்தில் தினேஷ் கார்த்திக் வெளியேறினார். இவர் 47 பந்தில் 4 பவுண்டரி உட்பட 37 ரன் எடுத்தார். பலத்த கரகோஷத்திற்கு இடையே தோனி களம் வந்தார். இவர் கோஹ்லிக்கு கம்பெனி கொடுக்க சரிவிலிருந்து இந்தியா மீளத் துவங்கியது. இருவரும் அசத்த இந்தியா 41வது ஓவரில் 200 ரன் கடந்தது.

கடைசி கடத்தில் தோனி ‘ஹெலிகாப்டர் ஷாட்’ உட்பட அதிரடியாக விளையாடி ரன்குவிப்பார் என எதிர்பார்த்த நிலையில், மீண்டும் எழுச்சி பெற்ற பவுலட், ஆபத்தான தோனியை வெறியேற்ற ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தோனி 45 பந்தில் 2 பவுண்டரி உட்பட 25 ரன் எடுத்தார். பலத்த எதிர்பார்ப்பிற்கு இடையே அதிரடி வீரர் பாண்ட்யா களம் வந்தார். தொடக்கத்தில் சற்று அமைதி காத்த இவர் சான்ட்னர் பந்தில் இமாலய சிக்சர் அடித்து அசத்தினார். இந்த நேரத்தில் கோஹ்லி, ஒருநாள் போட்டியில் தனது 31வது சதத்தை பதிவு செய்ய அரங்கமே அதிர்ந்தது. இவர் 111 பந்தில் சதம் விளாசினார். இந்த சதம் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் பாண்டிங்கை பின்னுக்கு தள்ளி 2வது இடத்திற்கு முன்னேறினார். முதலிடத்தில் 49 சதத்துடன் சச்சின் உள்ளார்.

பவுல்ட் பவுன்சரை சரியாக கணிக்காத பாண்ட்யா, கேப்டன் வில்லியம்சனால் அபாரமாக கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார். இவர் 16 பந்தில் 1 பவுண்டரி, 1 சிக்சர் உட்பட 16 ரன் எடுத்தார், ஒருகட்டத்தில் இந்தியா 250 ரன்னையாவது எடுக்குமா என்ற நிலை இருந்தது. இந்த நேரத்தில் கோஹ்லியுடன் பவுனேஷ்வர் குமார் இணைந்தார். கடந்த சில போட்டிகளாகவே பேட்டிங்கிலும் புவனேஷ்வர் அசத்தி வருகிறார். அணிக்கு நேற்றும் இவர் கைகொடுத்தார். இவரது சில ‘ஷார்ட்டுகள்’ கேப்டன் கோஹ்லியை பிரமிக்க வைத்தது. பவுண்டரி, சிக்சர் என விளாசிய புவனேஷ்ர் குமார் ரசிகர்களை மகிழ்வித்தார்.

ஆட்டத்தின் கடைசி ஓவரை சவுத்தீ வீச வந்தார். இந்த ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்த கோஹ்லி, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். இவர் 121 ரன் (125 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். இந்த ஓவரின் கடைசி பந்தில் பவுனேஷ்வர் குமார் வெளியேற இந்தியா 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 280 ரன் குவித்தது. புவனேஷ்வர் குமார் 26 ரன் (15 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். ஒருபந்தை கூட சந்திக்காத குல்தீப் யாதவ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் அபாரமாக பந்து வீசிய பவுலட் 4 (10-1-35-4) விக்கெட் வீழ்த்தினார். சவுத்தீ 3, சான்ட்னர் 1 விக்கெட் சாய்த்தனர்.

கடின இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு கப்டில், முன்ரோ இருவரும் சிறப்பான துவக்கம் தந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 48 ரன் சேர்த்த நிலையில், பும்ரா வேகத்தில் முன்ரோ (28) சரிந்தார். அடுத்து வந்த கேப்டன் வில்லியம்சன் (6) குல்தீப் ‘சுழலில்’ சிக்க ஆட்டம் பரபரப்பானது. இந்த நிலையில், கப்டிலுடன் அனுபவ வீரர் டெய்லர் இணைந்தார். தன் பங்கிற்கு கப்டில் (25) விக்கெட்டை பாண்ட்யா வீழ்த்தி அணிக்கு திருப்புமுனை தந்தார். இந்த நெருக்கடி நேரத்தில் டெர்லருடன் லதாம் இணைந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன் எடுத்து வந்தனர். தவிர, இருவரும் இந்திய பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டனர்.

டெய்லர் 58 பந்தில் அ¬ரைசதம் அடிக்க இதே போல் லாதாமும் அரைசதம் கடந்தார். இதையடுத்து ஆட்டம் நியூசிலாந்து வசம் சென்றது. 39வது ஓவரில் 200 ரன் கடந்த நிலையில், இந்த விக்கெட்டை வீழ்த்த கோஹ்லி கடும் முயற்சியில் இறங்கினார். இருந்தும் இருவரும் தொடர்ந்து அசத்த 39வது ஓவரில் நியூசிலாந்து 200 ரன்னை கடந்தது. அதிரடியாக விளையாடிய லதாம் 96 பந்தில் தனது 4வது சதத்தை பதிவு செய்தார், வெற்றிக்கு ஒரு ரன் தேவை என்ற நிலையில், புவனேஷ்வர் குமார் பந்தில் டெய்லர் ஆட்டமிழந்தார். இவர் 95 ரன் (100 பந்து, 8 பவுண்டரி) எடுத்தார். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 200 ரன் சேர்த்தது. அடுத்து வந்த நிகோலஸ் பவுண்டரி அடிக்க நியூசிலாந்து 49 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 284 ரனன் எடுத்து வெற்றி பெற்றது. லதாம் 103 (102 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), நிகோலஸ் (4) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய தரப்பில் பும்ரா, பாண்ட்யா, குல்தீப், புவனேஷ்வர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக டாம் லதாம் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரில் நியூசிலாந்து 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2வது போட்டி புனேயில் வரும் 25ம் தேதி நடக்க உள்ளது.

tttttttt