கவின்கோ் நிறுவனம் அறிமுகப்படுத்தும் கவின்’ஸ் மில்க் ஷேக்

image

image

image

கவின்கேர் நிறுவனத்தின் தலைவா் திரு.சி.கே.ரங்கநாதன், “தரமான மற்றும் புதுமையானப் பொருட்களை தயாாித்து அதை அனைத்து தரப்பு மக்களும் வாங்கி பயன் பெரும் வகையில் குறைந்த விலையில் விற்பதை நாங்கள் முக்கியக் குறிக்கோளாகக் கொண்டுள்ளோம். அந்த வகையில் இன்று நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள கவின்’ஸ் ப்ரூட் மில்க் ஷேக் ஒரு புதுமையான பழ பானமாகும். இந்தியா விலேயே பால்,பழம் மற்றும் தேன் அகிய மூன்றும் கலந்து உருவாக்கப்பட்டு வெளிவந்துள்ள ஒரே ஆரோக்கிய பானம் என்ற சிறப்பை இது பெறுகிறது. இதில் கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன.இதை தினந்தோறும் பருகலாம்,” என்று கூறினார்.

கவின்’ஸ் ப்ரூட் மில்க் ஷேக் ஐஎஸ்ஒ 22000 (ISO 22000)மற்றும் எற்றுமதி தர அங்கீகாரம் பெற்ற உற்பத்தியகத்தில் தயாாிக்கப்படுகிறது.ஐரோப்பாவின் நவீன யுஹெச்டி (UHT) தொழில்நுட்பத்துடன் நுண்ணுயிரற்ற முறையில் பேக் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது. நுண்ணுயிர் நீக்கப்பட்டுள்ளதால் கவின்’ஸ் ப்ருட் மில்க் ஷேக் ஆறு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். இதன் விலை எல்லோரும் வாங்கும் வண்ணம் ரூபாய் 25 ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கவின்’ஸ் ப்ரூட் மில்க் ஷேக் முதலில் தமிழ் நாட்டில் உள்ள அணைத்து முன்னணி அங்காடிகளிலும் சூப்பா் மாா்கெட் மற்றும் சில்லறைக் கடைகளிலும் கடைக்கும். அடுத்த மூன்று மாதங்களில் நான்கு தென்னிந்திய மாநிலங்களிலும் இந்த நிதியாண்டின் முடிவிற்குள் இந்தியா முழுவதும் இந்த பானம் வினியோகிக்கப்படும்.

Skip to toolbar