புதுச்சேரி தேர்தலில் வென்று திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும்: நாராயணசாமி

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று நாராயணசாமி கூறியுள்ளார். காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசு காரைக்காலை தொடர்ந்து புறக்கணிப்பதாக நாராயணசாமி புகார் அளித்துள்ளார். திமுக – காங்கிரஸ் கூட்டணியின் போது பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. என்.ஆர். காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவி்ல்லை எனவும் நாராயணசாமி புகார் அளித்துள்ளார்.