ஒரு வாரத்திற்குள் பாஸ்போட் பெற்றுக்கொள்ளும் புதிய நடைமுறையை மத்திய அரசு அறிவித்துள்ளது.

image

ஆதார் அட்டை உள்ளிட்ட 4 ஆவணங்களை சமர்பித்தால் விண்ணபித்த ஒரு வாரத்திற்குள் பாஸ்போட் பெற்றுக்கொள்ளும் புதிய நடைமுறையை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தமது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பேன்கார்டு ஆகியவற்றுடன் தம்மீது குற்றவழக்குகள் ஏதும் இல்லை என்பதற்கான பிரம்மான பத்திரம் ஆகியவற்றுடன் விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு வாரத்திற்குள் பாஸ்போட் வழங்கப்படும் என கூறியுள்ளார். புதிய நடைமுறையில் பாஸ்போட் பெற எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது என சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
சாதரணமாக பாஸ்போட் பெற விண்ணப்பித்தால் பாஸ்போட் சேவை மையத்தில் நேர்காணலுக்கு நேரம் பெற்று குறிப்பிட்ட தேதியில் நேர்காணல் முடித்தாலும் காவல் துறை ஆய்வறிக்கை சமர்பித்த பின்னரே பாஸ்போட் வழங்கப்படுகிறது. இதில் காவல் துறை ஆய்வறிக்கை சமர்பிப்பதில் தாமதம் ஏற்படுவதால் பாஸ்போட் பெற நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனை தவிர்க்கவே வெளியுறவு அமைச்சகம் பாஸ்போட் பெற புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளது.