மாமூல் பிரச்னையால் சப்-இன்ஸ்பெக்டரும், தலைமைக்காவலரும் கட்டிப்புரண்டு சண்டை

திருவான்மியூர், செப். 9–

நீலாங்கரை கொட்டிவாக்கம் வெங்கடேஷ்வரா நகர் 8–வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் புதிதாக வீடு கட்ட தனது வீட்டின் முன்பு உள்ள சாலையில் மணல், ஜல்லியை கொட்டி இருந்தார்.லன்சம்

இன்று காலை நீலாங்கரை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் காந்தி அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்தார். அப்போது சாலையில் மணல், ஜல்லி கொட்டபட்டு இருப்பது குறித்து வீட்டு உரிமையாளர் ராமகிருஷ்ணனிடம் கேட்டார்.

பின்னர் தனக்கு மாமூல் தரும்படி கேட்டார். அதற்கு ராமகிருஷ்ணன் உங்கள் போலீஸ் நிலையத்தில் உள்ள ஏட்டு ராமகிருஷ்ணன் ஏற்கனவே மாமூல் வாங்கி சென்று விட்டதாக கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சப்–இன்ஸ்பெக்டர் காந்தி, ராமகிருஷ்ணனை தனது மோட்டார் சைக்கிளில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார். உடனே வீட்டு உரிமையாளர் ராமகிருஷ்ணன் போன் மூலம் ஏட்டு ராமகிருஷ்ணனை தொடர்பு கொண்டு போலீஸ் நிலையத்திற்கு வரும்படி அழைத்தார்.

அங்கு வந்த ஏட்டு ராமகிருஷ்ணனிடம் சப்–இன்ஸ்பெக்டர் காந்தி எப்படி வீட்டு உரிமையாளர் ராமகிருஷ்ணனிடம் மாமூல் வாங்கலாம் என்று கூறி தகராறில் ஈடுபட்டார்.

பின்னர் 2 பேரும் போலீஸ் நிலையம் முன்பு கட்டி புரண்டு சண்டை போட்டனர். அப்போது நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த சப்– இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, ஏட்டு சாமுவேல் ஆகியோர் விரைந்து சென்று சண்டையை விலக்கி விட்டனர். சாலையில் செல்லும் பொதுமக்கள் போலீஸ்காரர்களின் சண்டையை வேடிக்கை பார்த்து சென்றனர்.

இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் நீலாங்கரை போலீஸ் நிலையம் முன்பு உள்ள சி.சி.டி.வி. காமிரா மூலம் விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கிறார்கள்.

AD

Skip to toolbar